"மிளகாய் பொடி தூவி, கொதிக்கும் எண்ணெய் ஊற்றி..." குழந்தைகளை பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்..
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் அஜித்குமார் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ராதா என்ற பெண் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ராதா, தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்க்கு சென்று விட்டார். இதற்கிடையில், சம்பவத்தன்று தனது மனைவி வீட்டில் வளர்ந்து வரும் தனது இரண்டு குழந்தைகளையும் பார்க்க தந்தை அஜித்குமார் சென்றுள்ளார்.
தனது கணவன் வந்ததை அறிந்த ராதா, கதவை அடைத்து விட்டு உள்ளே சென்று, வானலியில் எண்ணையை கொதிக்க வைத்துள்ளார். மேலும், கிச்சனில் இருந்து மிளகாய் பொடியை எடுத்து வந்து, அவரது கணவரின் கண்களில் தூவி உள்ளார். இதனால் அஜித்குமார், கண் எறிவதாக கூறி அலறியுள்ளார். அப்போது ராதா, கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல், கொதிக்கும் எண்ணெய்யை அவரது கணவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் அலறி துடித்த அஜித்குமாரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: மறந்தும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுத்து விடாதீர்கள்..