“கள்ளக்காதலன் இருக்கும் போது, குழந்தை எதுக்கு”; 5 வயது மகளை துடிதுடிக்க கொலை செய்த கொடூர தாய்..
டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 5 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர், தனது 5 வயது மகள் இறந்து விட்டதாக கூறி, மகளின் சடலத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு குழந்தையை பார்த்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆம், குழந்தையின் கழுத்தில் கழுத்தை நெரித்ததற்கான தடம் இருந்துள்ளது. இதையடுத்து, மருத்துவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, குழந்தையின் தாயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் குழந்தையின் தாய் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பெண்ணின் கணவர் அவரையும், அவரது குழந்தையையும் தனியாக விட்டுச் சென்றுள்ளார். இதனால் தனியாக வசித்து வந்த இவருக்கும் ராகுல் என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், ராகுலின் குடும்பத்தினர் இவர்களின் திருமணதிற்கு சம்மதம் தெரிவித்தாலும், பெண்ணின் 5 வயது குழந்தையை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் விரக்தியடைந்த அந்த பெண் தனது மகளை கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். இதையடுத்து, போலீசார் அந்த கொடூர தாய் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.
Read more: நெருங்கும் புயல்.. 24 மணி நேரமும் ஆவின் பாலகம் இயங்கும்.. ஆனா ஒரு கண்டிஷன்!!