For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாணவர்கள் செம குஷி..!! புதுச்சேரி, காரைக்காலில் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை..!!

A holiday has been declared for government and private schools and colleges in Puducherry and Karaikal tomorrow (November 27) in response to heavy rains.
05:06 PM Nov 26, 2024 IST | Chella
மாணவர்கள் செம குஷி     புதுச்சேரி  காரைக்காலில் அனைத்துப் பள்ளி  கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை
Advertisement

வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்தத் தாழ்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருமாறியுள்ள நிலையில், நாளை புயலாக மாறவுள்ளது. இதற்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனையொட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கனமழை எதிரொலியாக நாளை (நவம்பர் 27) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுமா? என மாணவர்களும், பெற்றோர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர்கள்..!! இனி நடவடிக்கை வேற மாதிரி இருக்கும்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

Tags :
Advertisement