1 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!!! கள்ளக் காதலுக்காக தாய் செய்த கொடூரம்!!!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இதையடுத்து, ராஜா அதே பகுதியில் வசித்து வந்த தீபிகா என்ற பெண்ணைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், இவர்களுக்கு ஒரு வயதில் பிரனீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தீபிகாவுக்கும் அவரது கணவரின் நண்பர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஆனால் இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு இவரது கணவனும், குழந்தையும் இடையூறாக இருந்துள்ளனர். இதனால் தீபிகா, தனது கணவரையும் குழந்தையையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி, கடந்த 13-5-2019 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் ராஜாவின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தீபிகா, தனது ஒரு வயது குழந்தையையும் இரக்கமில்லாமல் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர், இருவரின் உடல்களையும் ஏரிக்கரை அருகே குழிதோண்டி தீபிகா புதைத்து விட்டார். இதற்கு தீபிகாவின் கள்ளக்காதலனும் உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக, ஆற்காடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (நவம்பர் 20) தீபிகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மூன்றாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரது கள்ளக் காதலன் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.