"இந்த உறுப்பு இருந்தா தான டா கல்யாணம் பண்ணுவ"; காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு இளம்பெண் செய்த காரியம்..
உத்திரபிரதேச மாநிலத்தில் சாட்தவலா பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கடந்த 8 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் உறவு குறித்து அறிந்த அந்த வாலிபரின் உறவினர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்து, அந்த வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், அந்த வாலிபர் இளம்பெண்ணை முசாபர் நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அந்த இளம்பெண், என்னை காதலித்து விட்டு வேறொருத்தியை திருமணம் செய்யப் போகிறாயா என்று தனது காதலனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், இருவருக்கும் இடையே உள்ள தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த இளம்பெண், இந்த உறுப்பு இருந்தால் தானே இன்னொரு திருமணம் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். வலியால் அலறி துடித்த காதலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட வாலிபருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Read more: வீடே மணக்கும் சாம்பிராணியை, இனி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. எப்படி தெரியுமா?