For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆசை காட்டினால் கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்து விடுவோமா..? விஜய்க்கு பதிலடி கொடுத்த திருமா..!!

Thavekas think that if they show desire, they will come out of the alliance.
10:57 AM Nov 09, 2024 IST | Chella
ஆசை காட்டினால் கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்து விடுவோமா    விஜய்க்கு பதிலடி கொடுத்த திருமா
Advertisement

ஆசை காட்டினால் கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிடுவார்கள் என்று தவெகவினர் நினைக்கின்றனர். நான் சராசரியான அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Advertisement

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது, ”விஜயகாந்த் வந்தபோது கூறினார்கள் விசிக காணாமல் போய்விடும் என்று. இன்று விஜய் வந்தவுடன் பயங்கரமான ஹைப் கொடுக்கின்றனர். ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் திரும்ப திரும்ப போட்டுக் காட்டுகின்றனர். ஆனால், நமக்கு அப்படி செய்யவில்லை.

நான் சினிமா நட்சத்திரம் கூட இல்லை. எப்படி இவ்வளவு லட்சம் பேரை ஈர்த்தார்கள் என்று விவாதித்தார்களா?. விஜய்க்கு ஆர்கானிக் மாஸ் என்கின்றனர். விசிகவுக்கு என்ன இன்ஆர்கானிக் மாஸா.. நாங்கள் காசு, பிரியாணி என எதையும் கொடுக்கவில்லை. குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளோடு விசிகவுக்கு வந்தனர். திருமாவளவன் தலைமையில் ஆட்சி, கூட்டணி என்று யாராவது பேசினார்களா?. இதுதான் இந்த சமூகம். விசிகவை ஆசை காட்டினால் வெளியில் வந்துவிடுவார்கள் என்று தவெகவினர் நினைக்கின்றனர். திருமாவளவன் சராசரியான அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும்.

அதைப் புரிந்து கொள்ளவே உங்களுக்கு இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும். யார் வந்தாலும், புதிய புதிய கட்சிகளைத் தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் விசிகவுக்கு போட்டியாளர்களாக இருக்க முடியாது. எங்களுடைய களம் முற்றிலும் வேறானது. இந்தக் களத்தில் யாரும் நம்முடன் போட்டிக்கு வர முடியாது. இந்த இயக்கத்தை நம்மால் மட்டும்தான் செயல்படுத்த முடியும். எனவே, நாம் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில் அவசரப்பட்டு எதையும் செய்துவிடக் கூடாது” என்றார்.

Read More : அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! இன்றைய விலை நிலவரம்..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

Tags :
Advertisement