For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடிக்கு கயானா நாட்டின் உயரிய விருது..!! நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவிப்பு..!! 4-வது தலைவர் என்ற பெருமை..!!

Prime Minister Modi was awarded Guyana's highest national award, 'The Order of Excellence'.
08:23 AM Nov 22, 2024 IST | Chella
பிரதமர் மோடிக்கு கயானா நாட்டின் உயரிய விருது     நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவிப்பு     4 வது தலைவர் என்ற பெருமை
Advertisement

இந்திய பிரதமர் மோடி 3 நாடுகளுக்கான தனது அரசு முறை சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக நைஜீரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபரை சந்தித்துவிட்டு, பிரேசில் சென்றார். பின்னர், அங்கு நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின், கயனா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisement

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கயானா நாட்டின் உயரிய தேசிய விருதான 'தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ்' (The Order of Excellence) விருது வழங்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான், பிரதமர் மோடிக்கு இந்த விருதை வழங்கினார். இதன் மூலம் கயானாவின் உயரிய தேசிய விருதை பெறும் நான்காவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனைக்காகவும், உலக சமூகத்திற்கு சிறப்பான சேவை செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், ”இந்த விருதை இந்திய மக்களுக்காகவும், இந்தியா-கயானா மக்களிடையே நிலவும் உறவுக்காகவும் அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "கயானாவின் உயரிய விருதை எனக்கு வழங்கிய அதிபர் டாக்டர் இர்பான் அலிக்கு மனப்பூர்வமான நன்றி. இது 140 கோடி இந்திய மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்" என்று பெருமிதம் கொண்டுள்ளார்.

Read More : நாளொன்றுக்கு ரூ.6 கோடி மோசடி..!! 17,000 வாட்ஸ் அப் கணக்குகள் அதிரடி முடக்கம்..!! உள்துறை அமைச்சகம் உத்தரவு..!!

Tags :
Advertisement