முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்களே ரெடியா..? பள்ளிகள் மீண்டும் திறப்பு..!! இந்த மாவட்டங்களில் இன்று அரையாண்டுத் தேர்வு..!!

All schools are set to reopen today (January 2) after the half-year vacation.
07:30 AM Jan 02, 2025 IST | Chella
Advertisement

அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று (ஜனவரி 2) அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.

Advertisement

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் டிசம்பர் 23ஆம் தேதியுடன் அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து, டிசம்பர் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனால், பல மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், 9 நாட்கள் விடுமுறை முடிந்து, இன்று (ஜனவரி 2) அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே, பெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஆகையால், இந்த மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முன்னதாக, இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால், 2 நாட்களுக்கு மட்டுமே பள்ளிகள் இயங்கும். பிறகு சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். எனவே, சொந்த ஊர் சென்றுள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு ஜனவரி 6ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், பள்ளிக்கல்வித்துறை இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : ஆண்களே..!! அந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப வீக்கா இருக்கீங்களா..? அப்படினா இதை சாப்பிடுங்க..!! சூப்பரா வேலை செய்யும்..!!

Tags :
அரையாண்டுத் தேர்வுபள்ளிகள் திறப்புபுத்தாண்டு கொண்டாட்டம்மாணவர்கள்விடுமுறை
Advertisement
Next Article