முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகிழ்ச்சி செய்தி...!சமூக நல மாத ஓய்வூதியம் ரூ1,600 இரண்டு தவணைகளும் வழங்கப்படும்...! அரசு அறிவிப்பு...!

07:00 AM Apr 08, 2024 IST | Vignesh
Advertisement

கேரளாவில் நிலுவையில் உள்ள சமூக நல ஓய்வூதியத்தில் மேலும் இரண்டு தவணைகளை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

மாநில நிதியமைச்சர் பால கோபால் கூறியதாவது; மார்ச் மாதத்தில், ரூ.1,600 மாத சமூக நல ஓய்வூதியம் ஆறு மாதங்களாக நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் ஒரு தவணைத் தொகையை செலுத்தப்பட்டது. இந்த நிலையில் ரம்ஜான் மற்றும் விஷு பண்டிகைக்கு முன்னதாக அடுத்த ஒதுக்கீட்டை செவ்வாய் முதல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

இந்தத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் அல்லது கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்படும். சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கான ஓய்வூதிய நிலுவை தொகை மாநில அரசு வழங்காமல் ஏமாற்றிவிட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மிகப்பெரிய பிரச்சாரத்தில் ஒன்றாகும்.

இந்த நிலையில் நிலுவையில் உள்ள சமூக நல ஓய்வூதியத்தில் மேலும் இரண்டு தவணைகளை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் 20 புதிய மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article