பேக்கேஜ் உணவுப் பொட்டலங்களில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவு!. பெரிய எழுத்தில் எழுவது கட்டாயம்!. FSSAI!
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருள் பொட்டலங்களில் சர்க்கரை, உப்பு கொழுப்பு அளவு பெரிய தடிமனான எழுத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும் என்று நிறுவனங்களுக்கு உத்தரவிட உணவுப் பொருள் ஒழுங்காற்று அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உணவுப் பொருள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் பொட்டலங்களில் உணவு உப்பு, சர்க்கரை கொழுப்பின் அளவை தடிமனான எழுத்துகளில் பெரிதாக குறிப்பிடுவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்எஸ்எஸ்ஏஐ தலைவர் அபூர்வா சந்திராவின் தலைமையில் நடைபெற்று 44வது உணவு ஒழுங்காற்று கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொட்டலங்களில் உப்பு, சர்க்கரை கொழுப்பின் அளவுகள் குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் வகையில், 2020ம் ஆண்டின் சத்து விவரக் குறிப்பீட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்ய அந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் இது,தொடர்பான சுற்றறிக்கை உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். இது தவிர இந்த விதிமுறை திருத்தம் தொடர்பான வரைவு உத்தரவு எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது இது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களும் கேட்டறியப்படும்.
வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் உணவுப் பொருள்களில் உள்ள உப்பு சர்க்கரை கொழுப்பு ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த விவரத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ப அவற்றை வாங்குவதா, வேண்டாமா என்ற சரியான முடிவை எடுப்பதற்கு வசதியாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான உணவுப் பொருள்களை தேர்ந்தெடுக்க உதவுவது, தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்துவது, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது, ஆகிய நோக்கங்களுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Readmore: அதிகரிக்கும் எச்.ஐ.வி!. 47 மாணவர்கள் மரணம்!. 828 பேருக்கு பாசிட்டிவ்!. அதிர்ச்சி!