மீண்டுமா..? சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும்..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று (அக்.16) அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. நேற்று பகலில் கொட்டிய மழை, பின்னர் இரவில் படிப்படியாக குறைந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்வதால் அதி கனமழையில் இருந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் தப்பித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (அக்.16) அதி கனமழை (204 மி.மீட்டருக்கும் அதிகமாக) பெய்யு வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் நாளைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : முதல் கணவரை கொன்று 2-வது திருமணமா..? வெளிநாடு வேலைக்கு சென்றதும் 3-வது திருமணம்..!! நடந்தது என்ன..?