’வரும் தேர்தலில் எனக்கு சீட் கிடையாதா’..? கொந்தளித்த அமைச்சர் ரோஜா..!! என்ன சொன்னாருன்னு பாருங்க..!!
ஆந்திர மாநில அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ரோஜாவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என தகவல் பரவியது. இதற்கு அவர் காட்டமான பதில் அளித்துள்ளார்.
ஆந்திராவில் இப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஆட்சி நடைபெற்று வருகிறது, முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருக்கிறார். இவரின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலன், கலாச்சார, பண்பாட்டு துறை அமைச்சராக ரோஜா உள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏவான இவருக்கு மீண்டும் சீட் வழங்கப்படாது என்ற தகவல் பரவியது. மேலும், ரோஜா மீது ஜெகன் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ரோஜா, “ஆந்திராவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியை கட்சியின் மேலிடமும், முதல்வரும் மேற்கொண்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதுதான் எங்கள் இலக்கு. மக்கள் செல்வாக்கு குறைந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர முடியாது என முதல்வர் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.
இந்நிலையில், எனக்கு மீண்டும் போட்டியிட ஜெகன் வாய்ப்பு தர விரும்பவில்லை என சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். எனது தொகுதியில் நான் செய்த வளர்ச்சி பணிகள் அதிகளவு உள்ளது. தற்போதும் எனது தொகுதியில் இரவில் தங்கி மக்களோடு மக்களாக வளர்ச்சி பணிகளுக்காக செயல்படுகிறேன். சிலர் வேண்டுமென்ற எனக்கு வாய்ப்பு தர மாட்டார்கள் என வதந்தி பரப்புகின்றனர். ஆனால், கட்டாயம் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிடுவேன். நகரி மட்டுமின்றி ஆந்திராவில் செல்வாக்கு மிக்க எந்த தொகுதி கொடுத்தாலும் வெற்றி பெறுவேன்” என்று கூறியுள்ளார்.