”சினிமா வேறு அரசியல் வேறு”..!! ரோட்ல போற சின்னைப் பையன் என்னைப் பார்த்து முறைக்குறான்..!! போஸ் வெங்கட் கதறல்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ளது. சினிமா வாழ்க்கையில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் மக்களுக்காக சேவையாற்றும் வகையில் அரசியல் களத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். தவெக மாநாட்டில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
மக்கள் விரோத ஆட்சியை திராவிடம் மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றுகிறீர்கள். இந்த நாட்டையே பாழ்படுத்தும் பிளவுபட்ட அரசியல் செய்பவர்கள் தான் தவெகவின் முதல் எதிரி. அடுத்து திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு பெரியார், அண்ணா பெயர்களை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் ஒரு குடும்ப சுயநல கூட்டம் தான் நம்முடைய அடுத்த எதிரி. அரசியல் எதிரி என ஆவேசமாக பேசினார் விஜய்.
இதற்கிடையே, விஜய்யின் பேச்சை திமுகவைச் சேர்ந்த நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார். அதில், “யப்பா… உன் கூடவா அரசியல் பண்ணனும். பாவம் அரசியல். பள்ளிக்கூட ஒப்பிப்பு மாதிரி இருக்கு. சினிமா நடிப்பு, அதீத ஞாபக சக்தி, வியப்பு, எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன். முடிவு??? பாப்போம்” என கூறியிருந்தார். இவரது கருத்துக்கு விஜய் ரசிகர்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது மீண்டும் பேசியுள்ள போஸ் வெங்கட், “விஜய்யின் பேச்சைப் பலமுறை கேட்டேன். அதன் பிறகு தான் அப்படி ட்வீட் செய்தேன். இதற்காக ரோட்டில் போனால் சின்ன பையன் கூட முறைக்கிறான். நானும் விஜய் ரசிகன்தான். அவர் படத்தை முதல் நாளே தியேட்டருக்கு சென்று பார்ப்பேன். ஆனால், அரசியல் வேறு என்பதால், அவரை எதிர்த்துப் பேசினேன். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.