சாதத்திற்கு பதில் சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?? நிபுணர்கள் அளித்த விளக்கம்..
பொதுவாகவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்த உடன், பலரும் செய்யும் ஒரு காரியம் என்றால் அது சாதம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, சப்பாத்தி சாப்பிடுவது தான். மேலும் சிலருக்கு, சாதம் சாப்பிடாமல் சப்பாத்தியை மட்டுமே சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறையுமா? உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்குமா? போன்ற பல சந்தேகங்கள் இருக்கும். உண்மை என்னவென்றால், சாதம் மற்றும் சப்பாத்தி இரண்டுமே உடல் எடையை குறைக்க உதவும். ஆம், இதனால் நீங்கள் இரண்டையும் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிடலாம். இதற்க்கு நீங்கள், ஒரு வாரத்தில் 4 நாட்கள் சப்பாத்தி சாப்பிட்டால், இரண்டு நாட்கள் கட்டாயம் சாதம் சாப்பிட வேண்டும். இதனால் உங்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பது மட்டும் இல்லாமல், தினமும் ஒரே உணவாக இல்லாமல் விதவிதமாக சாப்பிட்டது போலும் ஆகும்.
பொதுவாக, கோதுமையை விட அரிசியில் தான் கலோரி குறைவு. நீங்கள் இரண்டு சப்பாத்தி சாப்பிடும் போது இருக்கும் கலோரியை விட, 100கிராம் சாதத்தில் இருக்கும் கலோரி குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் நீங்கள் கோதுமை இல்லாமல், சோளம், கேழ்வரகு மற்றும் திணையில் சப்பாத்தி செய்து சாப்பிடுவதால், உடல் எடை விரைவாக குறையும். ஏனென்றால், திணை, வரகு ஆகியவற்றில் கிளைசிமிக் இண்டெக்ஸ் குறைவாகத் தான் உள்ளது. இதனால் உடலில் இன்சுலின் விகிதம் உடனடியாக அதிகரிக்காமல் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். பொதுவாக ஒரு மனிதனுக்கு தினமும் சராசரியாக 40 கிராம் நார்ச்சத்து உடலுக்கு தேவை. இதனால் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். குறிப்பாக, ப்ராசஸ்ட் மற்றும் ரீஃபைண்ட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
நாம் என்ன தான் சப்பாத்தியும் சாதமும் சாப்பிட்டாலும், உடற்பயிற்சி இல்லாமல் எதுவும் நடக்காது. சரியான உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு, முறையான உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடை குறையும்.
Read more: தினமும் 5 காளான் போதும்.. புற்று நோய் முதல் இதய நோய் வரை வராமல் தடுக்க முடியும்…