Bank | மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் இயங்குமா..? இயங்காதா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை வங்கிகளுக்கு பொருளாதார ஆண்டாக கணக்கிடப்படுகிறது. முதல் நாள் மற்றும் கடைசி நாளில் வங்கிகள் கட்டாயம் வேலை செய்யும். அந்த வகையில், இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி ஆண்டின் கடைசி நாளாகும்.
இந்நிலையில், வருகிற மார்ச் 31ஆம் தேதி வங்கிகளில் வழக்கமான பரிவர்த்தனைகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயரதிகாரிகள் கூறுகையில், இந்த நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அரசு கணக்குகளில் பணம் எடுத்தல், செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகள் மட்டுமே செயல்படவுள்ளன. அன்றைய தினம் வழக்கமான பரிவர்த்தனைகள் நடைபெறாது” என்று தெரிவித்துள்ளனர்.
Read More : ”சிக்கல் மேல் சிக்கல்”..!! MLA பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா ஓபிஎஸ்..?