முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெண்கள் சுடுகாட்டிற்கு ஏன் செல்லக்கூடாது.? என்ன காரணம்.?!

12:34 PM Jan 06, 2024 IST | 1newsnationuser5
Advertisement

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் செய்து வந்த பல பழக்கவழக்கங்கள் இன்று வரை மாறாமல் பின் தொடர்ந்து வருகிறோம். ஆனால் என்ன காரணத்திற்காக இந்த பழக்க வழக்கம் என்பதை குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. 

Advertisement

இப்படி காரணம் தெரியாமல் நாம் இன்று வரை பின் தொடரும் பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் பெண்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது என்பது. இதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை அறியலாம்.

அந்த காலத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடையாது. இறந்தவருக்கு கொள்ளி போடுபவருக்கு தான் சொத்தில் உரிமை என்ற பழக்கம் இருந்து வந்தது. பெண்களை என்னதான் செல்லமாக வீட்டில் வளர்த்தாலும் அவர்கள் இன்னொருவருடைய மனைவி ஆகப் போகிறவர்கள் என்பதால் பெண்களை சுடுகாட்டிற்கு வரை விடாமலும், கொல்லி போட விடாமலும் தடுத்து வந்தனர்.

மேலும் பெண்கள் எளிதான மனம் படைத்தவர்கள் என்பதால் சுடுகாட்டில் உடல் எரியும் தருணத்தில் ஏற்படும் நிகழ்வுகளை பார்த்து பெண்களின் மனம் பாதிக்கும் என்பதாலும் சுடுகாட்டிற்கு செல்ல விடாமல் தடுத்தனர். இந்த காரணங்களினாலேயே பெண்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
crematoriumsfemaleLifestyle
Advertisement
Next Article