For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கருங்காலி மாலை அணிவது ஏன்..? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க..!!

04:42 PM Nov 18, 2023 IST | 1newsnationuser6
கருங்காலி மாலை அணிவது ஏன்    அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க
Advertisement

சமீப காலமாக கருங்காலி மாலை மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் பிரபல நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்திருப்பது தான். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதனை அணிவதால் என்ன நன்மை இருக்கின்றது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

இயற்கையிலேயே சில மரங்களில் பல அற்புதமான சக்திகள் நிறைந்துள்ளது. அவற்றில் மிக முக்கிய மரம் என்று சொன்னால் அது கருங்காலி மரம் தான். ஏனென்றால், இந்த மரம் இருக்கும் இடத்தில் இடி, மின்னலால் பாதிப்பு ஏற்படாது. சொல்லப்போனால் இயற்கை சீற்றங்கள் எதுவும் இந்த மரத்தை சேதப்படுத்த முடியாது என்பது அறிவியல் ரீதியாகவும் ஆராய்ந்து அறியப்பட்டுள்ள உண்மை.

எனவே தான் பண்டைய காலங்களில் கோவில் கோபுர கலசத்தில் நவதானியங்களோடு கருங்காலி கட்டைகளையும் சேர்த்து வைத்து கும்பாபிஷேகம் செய்துள்ளனர் நமது முன்னோர்கள். இந்த மரத்திற்கு இயற்கையாகவே நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி அதிகமாக உள்ளது. மேலும் தீய சக்தி மந்திர பிரயோகங்களை ஒருநொடியில் பயனற்று போக செய்ய கூடியது இந்த மரம். எனவே, நீங்கள் இந்த மரத்தால் செய்யப்பட்ட கருங்காலி மாலையை உங்கள் கழுத்தில் அணிவதால் எதிர்மறை எண்ணங்களில் இருந்து இலகுவில் விடுபடலாம். மேலும், உடல் மற்றும் மனம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கருங்காலி மாலையை ஆண் பெண் என இருவரும் அணியலாம். கருங்காலி மாலையை நம் கழுத்தில் அணிந்தால் உடலில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் கட்டுப்படும். இவை, நம் உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்தவும், ஜீரணக் கோளாறு நீக்கவும், மாதவிடாய் கோளாறு சரி செய்யவும், மலட்டுத்தன்மை நீக்கவும், சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக வைக்கவும், துணைப்புரிகிறது.

கருங்காலி மரத்திற்கு கிருமிகளை அழிக்கும் பண்பு காணப்படுகிறது. அதனால் கருங்காலியால் செய்யப்பட்ட மாலையை அணிந்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் நோய் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. இதுவே கருங்காலி மாலையை அணிவதற்கான அறிவியல் ரீதியான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement