For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தங்க ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் ஏன் அணியக்கூடாது? காரணங்களும்…விளக்கங்களும்..!!

04:50 AM May 12, 2024 IST | Baskar
தங்க ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் ஏன் அணியக்கூடாது  காரணங்களும்…விளக்கங்களும்
Advertisement

பொதுவாக தங்க ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதேபோல தங்க கொலுசும் அணியக்கூடாது என்று சொல்வார்கள். இதற்கு பின்னால் நிறைய காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.

Advertisement

தங்கத்தை மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்வார்கள். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கா என்று சொல்வார்கள். மேலும் கல்யாணம் ஆகி பெண் வீட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வருகின்றாள் நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்வது வழக்கம். ஏனென்றால், ஒரு பெண் ஒவ்வொரு வயதிலேயும் ஒவ்வொரு பருவத்தை எட்டுகிறாள். அதோபோல ஓவ்வொரு பருவத்திலும் மகாலட்சுமி ஒவ்வொரு இடத்தில் வாசம் செய்வாள். கன்னியாக இருக்கும் போது காதுக்கு கீழ்புறம், கழுத்து பகுதியிலும், திருமணம் ஆன பிறகு அவள் வைக்கும் நெற்றி பொட்டில், நேர் வகிட்டில் வாசம் செய்வாள் என்று கூறுவார்கள்.

இந்த காரணத்தால்தான் பெண்கள் தலை சீவாமல் இருக்கக் கூடாது. திருமணம் ஆனதும் நெற்றியில் பொட்டு வைக்க வேண்டும் என சொல்வார்கள். நல்ல மனமும், உதவி செய்யும் குணமும் கொண்ட எல்லா பெண்களும் எப்போதும் மகாலட்சுமியின் அம்சம்தான். அதேபோல் தங்கமும் மகாலட்சுமியின் அம்சம்தான். அதனால்தான் தங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்பார்கள். அதேபோல் தங்க கொலுசு போடுவதும் தவறாகும் என்று சொல்கிறார்கள். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் தங்க கொலுசு, மெட்டி எல்லாம் அணிகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More: PMO Modi | “மோடி தான் பாஜகவின் நிரந்தர பிரதமர்..” அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதிலடி.!!

Tags :
Advertisement