For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரயில் தண்டவாளத்தை போல் மெட்ரோ பாதையில் கற்கள் இல்லாதது ஏன்?… மறைந்திருக்கும் அறிவியல் காரணம்..!

12:03 PM Jan 06, 2024 IST | 1newsnationuser3
ரயில் தண்டவாளத்தை போல் மெட்ரோ பாதையில் கற்கள் இல்லாதது ஏன் … மறைந்திருக்கும் அறிவியல் காரணம்
Advertisement

இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தண்டவாளத்தில் கற்கள் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரயில் தண்டவாளத்தில் கற்கள் போடப்படுவதற்கான காரணங்கள் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

Advertisement

ரயில் பாதையையும், தண்டவாளத்தையும் பார்க்க மிகவும் எளிமையாக இருக்கிறது, உண்மையில் இது அவ்வளவு எளிதானது அல்ல, அந்த பாதையின் கீழ் கான்கிரீட் போடப்பட்டு உள்ளன, அவை ஸ்லீப்பர்கள் என்று அழைக்கப்படுகின்றன, இந்த ஸ்லீப்பர்களுக்கு இடையில் போடப்பட்டிருக்கும் கற்கள் பாலாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு அடுக்கு மண் போடபப்ட்டு, அதற்கும் மேல் கற்கள் போடப்பட்டுள்ளது.

இரும்பினால் செய்யப்பட்ட ஒரு ரயிலின் எடை சுமார் 1 மில்லியன் கிலோ ஆகும், இது பாதையில் மட்டுமே கையாள முடியாது. இவ்வளவு கனமான ரயிலின் எடையைக் கையாள்வதில், இரும்பினால் ஆன தடங்கள், கான்கிரீட்டால் செய்யப்பட்ட ஸ்லீப்பர்கள் மற்றும் கற்கள் அனைத்தும் பங்களிக்கின்றன. ரயிலின் பெரும்பாலான சுமை இந்த கற்களில் மட்டுமே உள்ளது. கான்கிரீட்டால் செய்யப்பட்ட ஸ்லீப்பர்கள் இருக்கும் இடத்தை விட்டு நகராமல் இருப்பது கற்களால் தான் என்பது சுவராசியமான விஷயம்.

பாதையில் புல் மற்றும் பிற தாவரங்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது. பாதையில் கற்கள் பதிக்கப்படாவிட்டால், பாதையில் புல் மற்றும் மரங்கள் வளர்ந்துவிடும். இதை தடுப்பது தண்டவாளங்களில் இருக்கும் கற்கள் தான். தண்டவாளத்தில் ரயில் செல்லும் போது அதிர்வு ஏற்பட்டு, இதன் காரணமாக தண்டவாளங்கள் நகரும் வாய்ப்பு அதிகரித்து, அதிர்வை குறைக்கவும், தண்டவாளங்கள் நகராமல் தடுக்கவும், பாதையில் கற்கள் பதிக்கப்படுகின்றன. ரயில் தண்டவாளத்தில் ஓடும் போது, ​​அனைத்து எடையும் கான்கிரீட் செய்யப்பட்ட ஸ்லீப்பர் மீது விழுகிறது. அதைச் சுற்றி அமைக்கப்பட்ட கற்கள் கான்கிரீட் ஸ்லீப்பர் நிலையாக இருப்பதை எளிதாக்குகிறது. இந்தக் கற்கள் தான் ரயிலின் சுமூகமான இயக்கத்திற்கு காரணம் ஆக இருக்கிறது.

மெட்ரோ ரயில் பாதைகளில் தடம் பதிக்கும் கற்கள் ஏன் போடப்படவில்லை? ரயில்கள் சில மணிநேரங்களுக்கு ஒருமுறை ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போது, மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 5 முதல் 10 நிமிடங்களுக்கும் நடைமேடைகளைக் கடக்கின்றன. தண்டவாளங்களில் கற்களை இடுவதும், அதைப் பராமரிப்பதும் மிகவும் கடினமாக இருக்கும்.

மெட்ரோ பாதைகள் தரை மட்டத்தில் அரிதாகவே உருவாக்கப்படுகின்றன. அவை தரைக்கு மேலே அல்லது தரையில் கீழே உருவாக்கப்படுகின்றன. இதன் அர்த்தம் அவற்றை பராமரிப்பது கடினம் மற்றும் தொடர்ந்து கற்களை இடுவதால், அதிக பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம். அதிர்வுகளை குறைக்க, மெட்ரோ பாதைகளில் கல்லை விட கான்கிரீட் பொருத்தப்பட்டுள்ளது. கான்கிரீட்டின் விலை கல்லை விட அதிகமாக இருந்தாலும் தேய்மானம் குறைவு தான், குறைந்தபட்ச பராமரிப்பு என ரயில் நிலையப்பாதைகளுக்கு மாறாக இது உள்ளது

Tags :
Advertisement