ராமர் கோவில் கும்பாபிஷேகம்: "ஜனவரி 22 2024" தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்.? வேத ஜோதிடங்களில் அந்த நாளின் சிறப்புகள்.!
அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நண்பகல் 12:20 மணி அளவில் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவில் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் மடாதிபதிகள் சாமியார்கள் முனிவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்து மத புராணங்களின் படி அபிஜித் முகூர்த்தம், அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வர்த சித்தி யோகம் ஆகியவற்றின் சங்கமத்தில் ஸ்ரீ ராமர் பிறந்ததாக கூடுகிறது. மேலும் இந்த நான்கு நட்சத்திரங்களும் ஜனவரி 22 ஆம் தேதி ஒரே சீராக அமைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தான் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஜனவரி 22ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் அஜித் முகூர்த்தம் 12:16 மணிக்கு துவங்க இருப்பதால் கோவில் கும்பாபிஷேக விழா 12:20 மணியிலிருந்து தொடங்க இருக்கிறது.
அபிஜித் முகூர்த்தத்தின் சிறப்புகள்: வேத ஜாதக கணிப்பின்படி அஜித் முகூர்த்தம் ஒரு நாளின் சக்தி வாய்ந்த நேரமாக கணக்கிடப்படுகிறது. இந்த முகூர்த்த காலம் 48 நிமிடங்கள் நீடிக்கும். வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி அபிஜித் முகூர்த்தம் இந்திய நேரப்படி நண்பகல் 12:16 மணிக்கு தொடங்கி 12:59 மணிக்கு முடியே இருக்கிறது . இதன் காரணமாக ராமர் கோவில் கும்பாபிஷேக விழா 12:20 மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் அபிஜித் முகூர்த்தம் இதிகாசங்களில் இந்துக்களின் புனித நேரமாக கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் தான் சிவபெருமான் திரிபு என்ற அசுரனை வதம் செய்துள்ளார். மேலும் இந்த முகூர்த்த நேரத்தில் ஒருவரின் வாழ்க்கையில் இருக்கும் எதிர்மறை சக்திகள் வெளியேற்றப்படுவதாகவும் முனிவர்கள் கூறுகின்றனர்.
மிருகசீர்ஷா நட்சத்திரத்தின் சிறப்புகள்: வேத ஜோதிடங்களின்படி மிருகசீர்ஷா 27 நட்சத்திரங்களில் ஐந்தாவதாக இடம்பெறும் நட்சத்திரமாகும்.மிருகசீர்ஷா என்றால் மான் தலை என அர்த்தம். நட்சத்திரங்களின் உலகை ஆண்டு வந்த அளிக்க முடியாத கடவுள்களின் சக்தியான சோமனை அரக்கர்கள் கடத்திச் சென்று தாமரைக்குள் மறைத்து வைத்துள்ளனர். அப்போது தெய்வங்கள் சென்று மான்களின் ராஜாவான மிருகஷிர் உதவியை நாடி இருக்கின்றனர். அவர் அரக்கர்களை வீழ்த்தி சோம ராஜாவை மீட்டுக் கொடுத்திருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை கவரும் வகையில் அழகாகவும் புத்தி கூர்மையுடனும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். ஸ்ரீராம் வரும் இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்திருக்கிறார். ஜனவரி 22 ஆம் தேதி மிருகசீர்ஷா நட்சத்திரத்திற்கு ஆன நேரம் அதிகாலை 03:52 மணிக்கு ஆரம்பமாகி 23 ஜனவரி 07:13 வரை இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் சிறப்புகள்: வேத ஜோதிடங்களின்படி நட்சத்திரம் ஒரு வாரத்தின் முதல் நாளுடன் சேரும்போது அது சுப நேரத்தை ஏற்படுத்துகிறது.மிருகசீர்ஷா நட்சத்திரம் திங்கட்கிழமையில் வருவதால் இது அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவற்றை உருவாக்குகிறது. இதன் காரணமாக ஜனவரி 22 ஆம் தேதி ஒரு மிகச் சிறந்த நாளாக அமைகிறது.அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வார்த்த சித்தி யோகம் ஆகியவை திங்கட்கிழமை காலை 07:13 மணிக்கு தொடங்கி செவ்வாய் அதிகாலை 04:58 வரை இருக்கும். இந்த மூன்று சிறப்பு மிக்க தருணங்களும் ஒரே தினத்தில் நீங்கள் இருப்பதால் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.