For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Diwali 2024 : தீபாவளி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது? நரகாசுரன் யார்? புராண கதைகள் என்ன சொல்கிறது..

Why is Diwali celebrated in India? Let's see why it is celebrated in this post.
04:01 PM Oct 30, 2024 IST | Mari Thangam
diwali 2024   தீபாவளி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது  நரகாசுரன் யார்  புராண கதைகள் என்ன சொல்கிறது
Advertisement

தீபாவளி பண்டிகை நாட்டில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.  தீபாவளி கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தை நினைவு கூறும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. தீபாவ‌ளி வ‌ந்தாலே குழ‌ந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புத்தாண்டை அணிந்து, ப‌ட்டாசு வெடி‌த்து, விதவிதமான உணவுகள் செய்து, பிறருடன் பகிர்ந்து உண்டு தங்கள் ம‌கி‌ழ்‌ச்‌சியை  வெளிப்படுத்துவார்கள்.

Advertisement

வட இந்தியாவின் இந்த நாளில் லட்சுமி தேவியை வேண்டி, மண் விளக்கு ஏற்றி, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். மேலும், இந்த பண்டிகை ராமர் தனது பதினான்கு ஆண்டு கால வன வாசத்திற்குப் பிறகு அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி திருநாள் பல புராணக் கதைகளில் வேரூன்றியுள்ளது. தீபாவளியன்று ஒளிரும் ஆயிரக்கணக்கான விளக்குகள் தீமையை நீங்க செய்து நன்மையை பிரதிபலிக்கிறது. மற்ற பாரம்பரிய பண்டிகைகளைப் போலவே, தீபாவளிக்கும் பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அழித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள். நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும் நராகாசுரன் கதை. நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன்.

இவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.

அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில், மக்கள் பட்டாசு வெடித்தும், வண்ண விளக்குகளை ஏற்றி தீபாவளி கொண்டாடினர்.

Read more ; சைபர் மோசடியை தடுக்க OTP ஆய்வுக்கான காலக்கெடு நீட்டிப்பு..!! – TRAI அறிவிப்பு

Tags :
Advertisement