Covai: அண்ணாமலை ஏன் கரூரில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுகிறார்...? எஸ்.பி வேலுமணி கேள்வி
அண்ணாமலை ஏன் கரூரில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுகிறார்? என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி; அண்ணாமலை ஏன் கரூரில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுகிறார்..? பாஜகவுக்கு 4 சதவிகிதம் தான் வாக்குகள் இருக்கிறது. பாஜக கூட்டணியில் இருக்கிற எந்தக் கட்சிக்கு கோவையில் வாக்கு வங்கி இருக்கிறது..? அதிமுக 34 சதவிகிதம் வாக்கு வங்கி வைத்துள்ள பெரிய கட்சி.
நீலகிரியில் நிற்பவர்கள் எல்லாம் பெரிய ஜாம்பவான்கள் தான். ஆனால், அதிமுக வேட்பாளர் சாதாரணமானவர் தான். இருந்தாலும் அவருக்கே வெற்றி கிடைக்கும். கோவையில் அதிமுகவுக்கு போட்டி பாஜக கிடையாது. பாஜக மூன்றாமிடம் தான் பிடிக்கும். கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டவர். அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டு திமுகவுக்கு சென்றிருக்கிறார். நமக்கு பிறகு தான் திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் எல்லாம். இதுதான் தேர்தல் கணக்கு. இதுதான் தேர்தல் களம். என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.