தங்கத்திற்கு ஏன் இவ்வளவு மதிப்புன்னு தெரியுமா.? பூமியில் எவ்வளவு தங்கம் இருக்கு.? ஆச்சரியமான உண்மை.!
உலோகங்களிலேயே அதிக விலை மதிப்பு மிக்கது தங்கம். தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை 5875 ரூபாயாக இருக்கிறது. தங்கமும் இரும்பு, அலுமினியம், பித்தளை, செம்பு, வெள்ளி இவற்றைப் போன்ற ஒரு உலோகம் தான். எனினும் தங்கம் மட்டும் ஏன் இவ்வளவு விலைமதிப்பு மிக்கதாக இருக்கிறது என்று யோசித்து இருக்கிறோமா.? வாங்க அதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் காண்போம்.
இதற்கு முதல் காரணம் தங்கம் பூமியில் மிகவும் அரிதாக கிடைப்பதாகும். பூமியில் ஏராளமான உலோகங்கள் இருக்கின்றன. அவற்றில் அலுமினியம் 8 % இருக்கிறது. இரும்பு 5.5% இருக்கிறது ஆனால் தங்கமோ பூமியில் 0.00003% மட்டுமே உள்ளது. மேலும் மற்ற உலோகங்களை விட தங்கத்திற்கு என சில தன்மைகள் உள்ளது. மேலும் தங்கம் விலை மதிப்பு மிக்கதாக இருப்பதற்கு காரணம் அதன் உற்பத்தி அளவை விட தேவையின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் ஆண்டு ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் தங்கத்தின் அளவு 2450 டன் ஆகும். ஆனால் தங்கத்திற்கான தேவை ஆண்டு ஒன்றுக்கு 3550 டன்னாக இருக்கிறது.
மேலும் பூமியில் தங்கத்தின் அளவு குறைவாக இருப்பதால் அவற்றைத் தேடி பூமியின் ஆழத்திற்கு செல்வதற்கான செலவுகளும் அதிகரிக்கிறது. தங்கமானது பூமியில் மிகவும் அரிதாக காணப்படும் ஒரு உலோகம். பொதுவாக இது போன்ற உலோகங்கள் புவியியல் காரணங்களால் உருவாக்குவதில்லை. அணுக்களில் ஏற்படும் சூப்பர் நோவா எக்ஸ்ப்ளோஷன் காரணமாக உருவாகிறது. இது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாகும். இதன் காரணமாகவே தங்கம் பூமியில் அரிதாக கிடைக்கிறது.