கணவன் சாப்பிட்ட தட்டில் மனைவி சாப்பிட்டுவது ஏன்..? பாலூட்டும் குழந்தைகளுக்கு இவ்வளவு நன்மைகளா..?
நாம் சாப்பிடும்போது, எந்த திசையில் சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? என்பது குறித்தெல்லாம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கின்றனர். அதேபோல கணவன் தட்டில் மனைவி சாப்பிட என்ன காரணம் தெரியுமா? இதுகுறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், இப்படி தான் இருக்க வேண்டும் என்பது நியதியாகவே உள்ளது. பிரார்த்தனை நேரம், குளிக்கும் முறை, சாப்பிடும் முறை, தூங்கும் முறை என அத்தனை விஷயங்களை பற்றியும் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதில் சாப்பிடுவது குறித்த வழிமுறைகள் மிக முக்கியமானவை.
சிலர் சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவிவிடுவார்கள். இப்படி செய்வது குடும்பத்துக்கு கஷ்டத்தை ஏற்படுத்துமாம். உணவை அவமதிக்கும் செயல் என்பதுடன், தீராத மனக்கஷ்டத்துக்கும் ஆளாக வேண்டி இருக்குமாம். அதேபோல, யாருக்காவது உணவு வழங்கினால், 2 அல்லது 4 என்ற எண்ணிக்கையில் மட்டுமே தர வேண்டும்.. ஒற்றை படை எண்களில் இட்லி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளை வழங்கினாலோ, பரிமாறினாலோ அது அமலங்கலமாக கருதப்படுகிறது. 3 என்ற எண்ணிக்கையில் உணவு பரிமாறினால், அது இறந்தவர்களின் தட்டில் உணவு பரிமாறுவதற்கு சமமாம்.
அதேபோல எந்த வீட்டில் உணவு வீணாக்கப்படவில்லையோ, அந்த வீட்டில் தெய்வத்தின் அருள் கிடைத்து வருமானம் பெருகும். பணத் தட்டுப்பாடு இருக்காது. எப்போதுமே சமையலறையும், உணவு சமைக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு, அந்த உணவை நாய், காகம் போன்ற ஏதாவது ஒரு ஜீவராசிக்கு அளித்துவிட்டு சாப்பிட வேண்டும். சாப்பிடும் முன்பு போஜன மந்திரம் சொல்ல வேண்டும்.
சாப்பிடும்போது மனம் அமைதியாக இருக்க வேண்டும். பிறரிடம் வாக்குவாதம், சண்டை போட்டுக் கொண்டே சாப்பிடக்கூடாது. அதேபோல, கிழக்கு அல்லது மேகு திசையை நோக்கி உணவு அருந்தலாம். இதனால், தொழிலில் முன்னேற்றம் அல்லது பணவரவு உண்டாகும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசை பார்த்து சாப்பிடக்கூடாது. சாப்பிடுவதற்கு வலது கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாப்பாட்டு தட்டில் மிச்ச உணவை வைக்கக்கூடாது. இப்படி செய்வதால் ஆயுள் குறைந்து, பலநோய்களுக்கு ஆளாக நேரிடுமாம்.
சாப்பிடும் அளவைவிட கூடுதலான உணவை தட்டில் வைத்து சாப்பிட்டாலும் அது தீங்கை தந்துவிடும். ஒரு கையில் தட்டை வைத்து கொண்டு சாப்பிடாமல், ஏதாவது விரிப்பை வைத்து சாப்பிட வேண்டும். கணவன் மிச்சம் வைத்த உணவை மனைவி சாப்பிடும் நடைமுறை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. இதற்கு காரணம், கணவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளவும், பிடிக்காத உணவுகளை அடுத்த முறை சமைக்காமல் தவிர்க்கவும்தான் கணவனுக்கு முதலில் சாப்பாடு பரிமாறப்படுகிறதாம்.
அதேபோல கணவனில் எச்சிலில் உள்ள புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து, அது அவளது பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்க செய்யுமாம். இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் 6 மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், குழந்தை பிறந்தபின் முதல் 6 மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனராம்.