கைக்கடிகாரத்தை ஏன் வலது கையில் கட்டுவதில்லை..? பின்னணியில் இப்படி ஒரு காரணமா..?
நேரம் என்பது தான் இந்த உலகிலேயே விலைமதிப்பற்றதாக பார்க்கப்படுகிறது. பொருட்களை கூட எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆனால், போன நேரத்தைத் திரும்ப வாங்க முடியாது. அப்படியான நேரத்தை நாம் கடிகாரத்தின் மூலம் தான் பார்க்கிறோம். சுவர் கடிகாரம், மேசை கடிகாரம், கைக்கடிகாரம் என்று பல வகைகள் உள்ளன. ஆனால், ஏன் நாம் இடது கையில் மட்டும் கடிகாரம் காட்டுகிறோம்? ஏன் பெரும்பாலும் வலது கையில் கட்டுவதில்லை? மக்கள் இதை பல ஆண்டுகளாக பின்பற்றுகிறார்கள். இதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணத்தை இப்பொது உங்களுக்கு சொல்கிறோம்.
முதலாவது காரணம், பெரும்பாலான மக்கள் தங்கள் வலது கையால் வேலை செய்கிறார்கள். வலது கை அடிக்கடி பிஸியாக இருப்பதால், இடது கையில் வாட்ச் அணிந்து நேரத்தைச் சரிபார்ப்பதில் சிக்கல் இல்லை. இடது கையில் கடிகாரத்தை கட்டுவதன் மூலம், அது பாதுகாப்பாக உள்ளது மற்றும் விழும் ஆபத்து இல்லை. பெரும்பாலான நிறுவனங்கள் இடது கையை மனதில் வைத்து கடிகாரங்களைத் தயாரிக்கின்றனர். அதே நேரம் அறிவியல் ரீதியாகவும் நாம் எதையும் வலதுகையால் செய்து பழகிவிட்டோம். அதனால் வாட்ச் முட்களை சரி செய்வது வலது கையால் செய்வோம். அப்போது கடிகாரம் இடது கையில் இருந்தால் தானே சரியாக இருக்கும்.
முட்கள் சரி செய்வது கூட அதனால் வெளிப்புறம் வருமாறு நிறுவனங்கள் வைத்துள்ளன. நீங்கள் வலது கையில் கடிகாரம் காட்டினால் இந்த முட்களை சரி செய்வது உள்நோக்கியே இருக்கும். இதனால், சரிசெய்வது கடினமாக இருக்கும். ஆனால், அதைத் தாண்டியும் சிலர் வலது கையில் வாட்ச் காட்டுகின்றனர். இதில் தவறேதும் இல்லை. சொல்லப்போனால், இது இடதுபுற மூளையைத் தூண்டும். பழங்காலங்களில், பலர் தங்கள் கைக்கடிகாரங்களை தங்கள் மணிக்கட்டில் கட்டுவதை விட தங்கள் பாக்கெட்டுகளில் வைத்திருந்தனர். தென்னாப்பிரிக்காவில் விவசாயிகள் போராட்டத்தின் போது தான் மணிக்கட்டு பழக்கம் மிகவும் பிரபலமானது. பெரும்பாலான உயரடுக்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வழியை கடைபிடித்து வந்தனர். இப்போது பொதுவான விஷயமாக மாறிவிட்டது.
Read More : ’இப்படியே போன இனி வீடு வாங்க முடியாது போலயே’..!! விலை தாறுமாறாக உயர்வு..!!