For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாய்கள் ஏன் குழந்தைகளை விரும்புவதில்லை?… திடீரென கடித்துவிட்டால் என்ன செய்வது?

05:50 AM May 08, 2024 IST | Kokila
நாய்கள் ஏன் குழந்தைகளை விரும்புவதில்லை … திடீரென கடித்துவிட்டால் என்ன செய்வது
Advertisement

Dogs: நாய்கள் ஏன் குழந்தைகளை விரும்புவதில்லை?… பல நாய்கள் குழந்தைகளை நேசிக்கின்றன, உண்மையில் சில இனங்கள் குறிப்பாக குழந்தைகளை பாதுகாக்கும். உதாரணமாக, ராட்வீலர்கள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை, ஏனென்றால் வீட்டிற்கு வெளியே உள்ளவர்கள் குழந்தையை வைத்திருக்க அனுமதிக்காத அளவிற்கு வீட்டு உரிமையாளருக்கே அவை பாதுகாப்பாக இருக்கும்.

Advertisement

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி ரேபிஸ் கிட்டத்தட்ட 100% ஆபத்தானது. இது அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் உள்ளது, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் 95% க்கும் அதிகமான மனித இறப்புகள் உள்ளன. கூடுதலாக, 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரேபிஸ் நோயால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தையை, ராட்வீலர் (rottweiler) நாய்கள் கடித்ததில் படுகாயமுற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், திடீரென குழந்தைகளை நாய் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.

முதலில் பதற வேண்டாம். அதேபோல குழந்தைகளையும் திட்டி அவர்களையும் பதற்றப்படுத்த வேண்டாம். இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளுக்கு நீங்கள் தரும் நம்பிக்கை முக்கியமானது. குழந்தைகளுக்குத் தைரியம் கொடுங்கள்.. நம்பிக்கை தரும் வார்த்தைகளைப் பேசுங்கள். பிறகு நாய் கடித்த பகுதியை நன்கு கழுவவும். சிறிய கடி என்றால் பல் பதிந்து இருக்கும். அந்த இடத்தை நன்கு தண்ணீரில் கழுவுங்கள்.. பைப் தண்ணீர் போல ஓடும் நீரில் கடிபட்ட இடத்தை சுத்தப்படுத்துவது ரொம்ப நல்லது. சோப் போட்டு சுமார் 5 நிமிடங்கள் வரை கடிபட்ட இடத்தை கழுவ வேண்டும்.

ரத்தம் வந்தால் அதை நிறுத்த பாருங்கள். ரத்தம் நிற்கும் வரை கடிபட்ட இடத்தின் மீது கை வைத்து மென்மையாக அழுத்தங்கள். பெரும்பாலும் இதைச் செய்தாலே ரத்தம் வருவது நின்றுவிடும். அதன் பிறகு தோல் உலர்ந்த உடன் சில ஆண்டிபயாடிக் ஆயில்மெண்டுகளை போடலாம். தூசி எல்லாம் படாமல் இருக்கக் கட்டுப் போடுங்கள். நாய்கள் கடிக்கும் போது அதில் இருந்து நமக்கு ரேபீஸ் நோய் வந்தால் தான் பேராபத்து.

உயிரிழப்பு கூட ஏற்பட்டுவிடும். ஆனால், பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வேக்சின் போட்டு இருப்பார்கள்.. இருந்த போதிலும் அதை நாய் ஓனர்களிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். முடிந்தால் அந்த நாயைக் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று ரேபீஸ் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

நாய் கடித்த இடத்தில் கட்டு போடக்கூடாது. சூரிய ஒளி படும்படி இருக்க வேண்டும். சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றை தடவக்கூடாது. பின்னர் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி மட்டுமே உயிர் காக்கும். நாய் கடித்த நாளான்று தடுப்பூசி போடுவதை 0 நாள் என்பர், பின்னர் 3, 7, 14, 28 என முறையே நாட்களை கணக்கிட்டு தடுப்பூசியை ஐந்து முறை செலுத்திக்கொள்ள வேண்டும்.

நாய் கடித்தால் என்னென்ன உணவை தவிக்கனும்? நாய் கடித்தால் பால், கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், தக்காளி, மீன், கோழி, ஆடு ஆகிய இறைச்சிகளை தவிர்க்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

Readmore: கொசுக்களால் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சல்!… மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை கடிதம்!

Advertisement