For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது ஏன்..? மத்திய அரசு கொடுத்த விளக்கத்தை பாருங்க..!!

Under the control of the Telecom Regulatory Authority of India (TRAI), it has been reported that telecom companies will set the customer charges for mobile phone services according to market conditions.
04:41 PM Jul 06, 2024 IST | Chella
ஜியோ  ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது ஏன்    மத்திய அரசு கொடுத்த விளக்கத்தை பாருங்க
Advertisement

ஜியோ, ஏா்டெல், வோடாஃபோன் ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயா்த்திக்கொள்ள மத்திய அரசு எவ்வாறு அனுமதி வழங்கியது என நாட்டிலுள்ள 109 கோடி கைப்பேசி பயனாளா்களுக்கும் பிரதமா் மோடி பதில் கூற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (டிராய்) கட்டுப்பாட்டின் கீழ், கைப்பேசி சேவைகளுக்கான வாடிக்கையாளா் கட்டணத்தை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அமைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கைப்பேசி சேவைக் கட்டணங்களை உயர்த்தியிருப்பதாகவும், உலகளவில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பாதுகாப்பதுடன், 5ஜி, 6ஜி, தொழில்துறைக்கான ஐஓடி/எம்2எம் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் முதலீகள் செய்வதற்கும் நிதியாதார தேவை முக்கியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசின் மேம்பட்ட கொள்கைகளால் கைப்பேசி சேவைக் கட்டணம் பரவலாகக் குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Read More : மக்களே..!! பான் கார்டில் மறைந்திருக்கும் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா..? இது தெரியாம இருக்காதீங்க..!!

Tags :
Advertisement