சத்தீஸ்கர் என்கவுன்டரில் 30 நக்சல்கள் சுட்டு கொலை..! ஏராளமான தானியங்கி ஆயுதங்கள் மீட்பு..!
சத்தீஸ்கரில் காவல் துறையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் 30 நக்சல்கள் கொல்லப்பட்டனர். நாராயண்பூர் - தாண்டேவாடா பகுதியில் மாட் பகுதியில் நக்சல்களை தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த மோதலில் நக்சலைட்கள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே சீரிஸ் மற்றும் பிற ஆயுதங்கள் உட்பட பல துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
என்கவுன்ட்டர் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், "வழக்கமான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, வனப்பகுதிக்குள் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. வனப்பகுதிக்குள் காவல்துறையினர் சென்றதும் நக்சலைட்டுகள் சுடத் தொடங்கினர். இதையடுத்து நக்சலைட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா காவல்துறையின் கூட்டுப் படை, என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் நிலைகொண்டது.
அப்போது இரு தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடந்தது. தேடுதல் நடவடிக்கை முடிந்த பிறகு, என்கவுன்ட்டர் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்படும்." என்றனர். காவல் துறை, பாதுகாப்புப் படையினரின் பதிலடியில் 30 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தகவலை, பஸ்தர் ஐஜி- பி.சுந்தர்ராஜும் உறுதி செய்துள்ளார். பஸ்தர் மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களில் இந்த ஆண்டு நடந்த என்கவுன்ட்டர்களில் இதுவரை 160-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.
அண்டை மாநிலமான பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் பல்வேறு கிளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களை கைது செய்தனர். நக்சல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ளனர், இது பிராந்தியத்தில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. நெலோனார் மற்றும் மிர்தூர் காவல் நிலையப் பகுதிகளில் மாவட்டப் படையின் வழக்கமான ரோந்துப் பணியைத் தொடர்ந்து செப்டம்பர் 29 அன்று கைது செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் பல ஆண்டுகளாக மாவோயிஸ்ட் நடவடிக்கைகளின் மையமாக உள்ளது, கிளர்ச்சியாளர்கள் பெரும்பாலும் பாதுகாப்புப் படையினரையும் பொதுமக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். மாநிலத்தின் தற்போதைய கிளர்ச்சி எதிர்ப்பு முயற்சிகள் உள்ளூர் போலீஸ் படைகள், துணை ராணுவப் பிரிவுகள் மற்றும் பிற பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு இடையே அதிகரித்து வரும் ஒருங்கிணைப்பால் பலப்படுத்தப்படுகின்றன.
Read more ; அபோட் ஆய்வகங்களின் Mpox கண்டறியும் சோதனை..!! – WHO ஒப்புதல்