இறந்த உடல்கள் ஏன் நீரில் மிதக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா.? காரணம் இதோ.!
இறப்பு என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் நிச்சயமாக நிகழக்கூடிய ஒன்று. இந்த உலகில் பிறந்த எந்த ஒரு உயிரினமும் இறக்காமல் இருக்க முடியாது. கால அளவுகள் காரணங்கள் வேறுபட்டாலும் இறப்பு என்பது நிச்சயமான ஒன்று.
உயிருள்ள மனிதனின் உடலை விட இறந்த மனிதனின் உடல் அதிக எடை கொண்டதாக இருக்கும். எனினும் இறந்த ஒரு உடல் நீரில் வீசப்பட்டாலோ அல்லது நீரில் மூழ்கி இருந்தாலோ அந்த உடலானது தண்ணீரில் மூழ்காமல் மிதக்கும். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நாம் நிறைய முறை யோசித்துப் பார்த்திருப்போம்.
தற்போது ஏன் இறந்த உடல் மிதக்கிறது என்று பார்க்கலாம். மனித உடலானது இறந்த பின்பு சிதைய தொடங்கும். இந்த சிதைத்தல் நம் உடலில் இருக்கக்கூடிய நுண்ணுயிரிகளால் நடைபெறுகிறது. ஒரு மனிதன் அல்லது உயிரினம் இறந்த பின்பு அதில் இருக்கக்கூடிய நுண்ணுயிர்கள் உடலை சிதைக்க செய்யும். இந்த செயல்முறை கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.
ஏனெனில் உடலில் உள்ள கரிம மூலக்கூறுகள் ஆற்றலை வெளியிட டீகம்போசர்களால் ஆக்சிஜனேற்றப்படுகின்றன. கார்பன்-டை-ஆக்சைடு வாயுவாக இருப்பதால் உடலின் அடர்த்தியை பராமரிக்கும் அளவிற்கு குறைகிறது. இதன் காரணமாகவே இறந்த உடல்கள் நீரில் மிதக்கின்றன.