”ஏன்டா இப்படி குடிச்சி மானத்த வாங்குற”..!! கடுப்பான தந்தை..!! மகன் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை..!!
குடிபோதையில் தகராறு செய்த மகன் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் செல்லூரில் வசிப்பவர் வாசுதேவன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது, இரண்டாவது மகன் லட்சுமணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளர். மேலும், இவர் தினமும் குடித்து விட்டு வீடு மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினமும் வழக்கபோல மது அருந்தி வந்துவிட்டு லட்சுமணன் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது தந்தை வாசுதேவனுக்கும், அவரது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த வாசுதேவன் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து மகனின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், லட்சுமணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, மகனைக் கொலை செய்த கையோடு வாசுதேவன் காவல் நிலையம் சென்று போலீஸில் சரணடைந்தார். அதைத்தொடர்ந்து, போலீசார் அவரது வீட்டிற்கு சென்று லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரணடைந்த வாசுதேவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : தமிழில் பேச, எழுத தெரிந்தால் போதும்..!! ரேஷன் கடைகளில் வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!