For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யார் முதலில் பாடுவது..? கலவரத்தில் முடிந்த வடகலை, தென்கலை பிரச்சனை..!! வேட்டியை மடித்துக் கட்டி தாக்குதல்..!!

01:30 PM Jan 18, 2024 IST | 1newsnationuser6
யார் முதலில் பாடுவது    கலவரத்தில் முடிந்த வடகலை  தென்கலை பிரச்சனை     வேட்டியை மடித்துக் கட்டி தாக்குதல்
Advertisement

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெறும் பார்வேட்டை திருவிழாவில் இந்த வரதராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, கருக்கு பேட்டை, திம்மராஜம்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், வெண்குடி, வாலாஜாபாத், புளியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார்.

Advertisement

சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது வடகலை தென்கலை சார்ந்த கோஷ்டிகள் திவ்ய பிரபஞ்சம் பாடி வருவது தொன்றுதொட்டு வருகிறது. இதில், வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக ‘யார் முதலில் திவ்ய பிரபஞ்சம் பாடுவது’ என்ற பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு தற்காலிக தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், இருபிரிவினருமே இக்கோவிலில் திவ்ய பிரபஞ்சம் பாட தடை விதிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல்கள் பாடப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்றும் அப்பாடல் பாடப்பட்டது. ஆனால், அப்போதும் வடகலை தென்கலை பிரச்சனை மீண்டும் எழுந்துவிட்டது. இதில் வடகலை தென்கலையினருக்குள் முதலில் வாய் சண்டை ஏற்பட்டது. அது சற்று நேரத்தில் தள்ளுமுள்ளாக மாறி கடைசியில் அடிதடியில் முடிந்தது. ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை விரட்டி விரட்டி தாக்குவதும், அவர்கள் தப்பி ஓடுவதும் அங்கிருந்த பக்தர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு இரு பிரிவினரும் சென்று விட்டனர்.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவர். அப்படி நேற்று வந்திருந்த பக்தர்கள், “அந்த தேவராஜ பெருமாளே வந்தால் கூட இவர்களின் பிரச்னையை முடிக்க இயலாது போல. இவர்களின் சண்டையினால் நாங்கள் சாமியை தரிசனம் செய்வது தடைபட்டுவிட்டது” என வேதனையுடன் கூறினர். இந்நிலையில், இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்தில் வடகலை பிரிவினர், தென்கலை பிரிவினர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது சாலவாக்க போலீசார் CSR பதிவு செய்துள்ளனர்.

Tags :
Advertisement