முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

SBI வங்கி-யின் அடுத்த தலைவர் யார்? நாளை ரிசல்ட்..!

05:00 PM May 20, 2024 IST | Mari Thangam
Advertisement

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க FSIB அமைப்பு நாளை நேர்முக தேர்வு நடத்த உள்ளது.

Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதற்கிடையில் வங்கி யாரை புதிய தலைவராக நியமிக்க உள்ளது என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்திய மக்களின் பெரும் பகுதி பணத்தை கையாளும் வங்கி என்பதால் எஸ்பிஐ வங்கியின் தலைவராக நியமிக்கப்படுபவர் திறமைசாலியாக இருக்க வேண்டும்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் இன்டிபென்டென்ட் அமைப்பான நிதி சேவை நிறுவனங்கள் பணியாளர் தேர்வு வாரியம் எஸ்பிஐ வங்கி தலைவர் பதவிக்கான நபர் பல தரப்பில் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் FSIB அமைப்பு மே 21 ஆம் தேதி நேர்முக தேர்வு நடத்த உள்ளது. இதே நாளில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி எஸ்பிஐ வங்கி தலைவர் பதவிக்கு SBI வங்கியின் மூன்று நிர்வாக இயக்குநர்களான சி.எஸ்.ஷெட்டி, அஸ்வினி குமார் திவாரி மற்றும் வினய் எம். தொன்சே ஆகியோர் இந்தப் பதவிக்கான முன்னணிப் போட்டியாளர்களாக இருக்கின்றனர். இதேவேளையில் SBI வங்கியின் நான்காவது நிர்வாக இயக்குநர் அலோக் குமார் சௌத்ரி ஜூன் மாத இறுதியில் ஓய்வுபெற உள்ளார்.

பொது துறை நிதி நிறுவனங்களில் மூத்த நிர்வாகிகளை நியமிக்கும் பொறுப்பு FSIB க்கு உள்ளது. இதனால் நாளை FSIB அமைப்பு மூவரையும் இன்டர்வியூவ் செய்ய உள்ளது. இதில் தேர்வான நபருக்கு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தினேஷ் காரா ஓய்வு பெறும் ஆகஸ்ட் 28 தேதிக்கு அடுத்த நாளே புதிய தலைவர் நியமிக்கப்படுவார்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் அவர் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தினேஷ் காராவின் பதவிக்காலத்தில், எஸ்.பி.ஐயின் செயல்பாடு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டது. இதேபோன்ற அல்லது இதை விடவும் சிறப்பான பர்பாமென்ஸ்-ஐ கொடுக்க வேண்டும். தினேஷ் காராவின் பதவிக்காலத்தில் எஸ்பிஐ வங்கி பங்கு விலை ரூ.250 லிருந்து ரூ.820 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கியின் லோன் வாங்குவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? நீங்களும் இந்த தவறை பண்ணாதீங்க..!!

Advertisement
Next Article