'யாருக்கு சார் வேணும் உங்க காசு’..? ’கோடி ரூபா கொடுத்தாலும் இனி என் புள்ளைய வாங்க முடியாது’..!! அமைச்சரிடம் கதறி அழுத சிறுமியின் தாய்..!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு அமைச்சர் பொன்முடி ஆறுதல் கூறினார்.
மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணமாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்த ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பொன்முடி, குழந்தையின் தாயாரிடம் வழங்கினார். ஆனால், அதனை வாங்க மறுத்த அவர், "காசு யாருக்கு வேணும்? எங்க புள்ளைய கோடி ரூபா கொடுத்தாலும் வாங்க முடியாது" எனக்கூறி கதறி அழுதார்.
இதையடுத்து, சிறுமியின் உறவினரிடம் அந்த காசோலையை அமைச்சர் பொன்முடி வழங்கினார். இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். யாரையும் விடமாட்டோம் என சிறுமியின் உறவினர்களிடம் உறுதியளித்தார். சிறுமியின் தாயார், அந்த காசோலையை சிறுமி உடல் வைக்கப்பட்ட பெட்டி மீது வைத்து அழுதார். அப்போது உறவினர் பெண் ஒருவர் அந்த காசோலையை தூக்கி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More : டீ குடிக்கும்போது இதை மட்டும் தொடவே தொடாதீங்க..!! இவ்வளவு பாதிப்புகள் வருமா..?