For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யார் அந்த சார்..? அதிமுக, பாஜக வரிசையில் இப்போது விசிக.. திமுக அரசுக்கு நெருக்கடி..!!

Who is that sir? We need an honest investigation: Thirumavalavan on Anna University student issue
12:24 PM Jan 02, 2025 IST | Mari Thangam
யார் அந்த சார்    அதிமுக  பாஜக வரிசையில் இப்போது விசிக   திமுக அரசுக்கு நெருக்கடி
Advertisement

கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவிற்கு உள்ளானது, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து சென்னை விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் பேசியுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்பது விசிக-வின் கோரிக்கை.

Advertisement

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்துள்ள பாலியல் வல்லுறவு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும்கூட, அந்த குற்றச்செயல் பெரும் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த சார்? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இதுபோன்ற சந்தேகம் இருப்பதால் தான் நேர்மையான விசாரணை தேவை. குற்றத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்து வருவது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு, அனுமதி பல்வேறு இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு போராட்டங்களும் நடந்துள்ளன. முழுவதுமாக மறுக்கப்படவில்லை. இதே இடத்தில் பல்வேறு சமயங்களில் பலர் போராடியுள்ளனர். ஆனால் இதை வைத்து சிலர் அரசியல் செய்ய வேண்டும் என்று செயல்படுவதால், அரசு அனுமதி மறுத்து வருவதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு போராட அனுமதி வழங்க வேண்டும் என்பது தான் விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கை வைக்கிறது என்றார்.

பள்ளி மற்றும் கல்லூரி வளாக விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தவிர்த்து வேறு சிலரும் ஈடுபட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளது. அதனால், அரசும், காவல்துறையும் நேர்மையான முறையில் விசாரணை செய்து குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்கக் கூடாது. அவர் சிறையில் இருக்கும்போதே விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Read more ; 4 மாதங்களாக மாயமான இளைஞர்..!! ஆற்றில் கொன்று புதைத்த உயிர் நண்பன்..!! உயிரோடு இருப்பது போல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்..!! விழுப்புரத்தில் பயங்கரம்..!!

Tags :
Advertisement