கேரட் யார்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்….
கேரட்டில் உள்ள நன்மைகள் நமக்கு தெரியும் அதில் நமக்கு தெரியாத ஒன்று இருக்கின்றது. சமையலுக்கு பயன்படக்கூடிய கேரட்டை, பொரியல், வறுவல், அல்வா, ஜூஸ் என நிறைய உணவு முறைகளில் சாப்பிட்டு வருகின்றோம். சிலர் கேரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களும் இருக்கின்றார்கள். அப்படி நாம் குடிக்க கூடிய கேரட் ஜூஸில் தீமைகளும் உள்ளன. அந்த தீமைகள் நமது உடலில் எந்த மாதிரியான பிரச்சனையை வரவைக்கின்றது என பார்க்கலாம்.
நன்மைகள் கேரட்ஜூஸ் தினமும் குடித்து வந்தால் கண்பார்வை நன்றாக தெரியும் அதே போல கண்புரை நோய் வராமல் தடுக்க முடியும்.தினந்தோறும் கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து அதன் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.அதுமட்டும் இன்றி கேரட்டை தினமும் சாப்பிட்டால் மாலைக்கண்நோய் விரைவில் குணம் பெறும்.
தீமைகள் கேரட்டில் அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால் நாம் சாப்பிலாம். இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் பக்க விளைவுகள் ஏற்படும்.இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கேரட் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.
அலர்ஜி உணவு – சிலருக்கு கேரட் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால், தோல் அலர்ஜி, படை வீக்கம், வயிற்றுப் போக்கு இது போன்ற பிரச்சனை வரும் எனவே கேரட்டை சாப்பிடும்போது மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள்- சர்க்கைர நோய் உள்ளவர்கள் கேரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏன் எனில் சர்க்கரையில் அளவை காட்டும் கினைகமிக் குறியீடு கேரட்டில் 97 உள்ளது. கேரட்டில் உலா சர்க்கரைப் பொருள் குளுகோசாக மாற்றப்பட்டு உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. எனவே சர்க்கரை நோயாளிகள் கேரட்டை வேகவைத்து சாப்பிட்டால் நல்லது.
பாலூட்டும் தாய்மார்கள்- பொதுவாக கேரட்டில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் உள்ளன. எனவே பாலூட்டும் தாய்மார்கள் கேரட் ஜூஸ் குடிப்பதால் அது தாய்ப்பாலின் சுவையை மாற்றுகின்றது.
ஹார்மோன் பிரச்சனை கேரட் உடல் நலத்திற்கு அவசியமான ஒன்றுதான். அப்படி இருந்தாலும் கூட சர்க்கரை நோய், குடல் பிரச்சனைகள், சர்க்கரை அளவு குறைதல், ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் கேரட் சாப்பிட்டால் உடலுக்கு அதிகப்படி பாதிப்பு தரும்.
பூச்சிகொல்லிகள்- கேரட்டில் மொத்தம் 26 பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. 8 பூச்சிக் கொல்லிகள் புற்று நோயை உண்டாக்க கூடியது. 16 ஹார்மோன் செயல்பாட்டை தடுக்க கூடியது. 3 நரம்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். 7 வளர்ச்சி பிரச்சனை ஏற்படுத்தும். எனவே அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.
கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டுவிட்டு திடீரென நிறுத்தினாலும் தூக்கமின்மை, பதற்றம், புளித்த ஏப்பம் போன்ற பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.