For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி உயிருக்கே ஆபத்து..!! - ஷாக் தரும் ஆய்வு முடிவுகள்

Studies have shown that people who do very strenuous exercises have a shorter lifespan than the average person.
04:40 PM Nov 21, 2024 IST | Mari Thangam
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி உயிருக்கே ஆபத்து       ஷாக் தரும் ஆய்வு முடிவுகள்
Advertisement

உடலை ஒரு எல்லையைத் தாண்டி அழுத்தம் கொடுத்து மிக கடினமான பயிற்சிகளை செய்யும் மனிதர்களுக்கு சராசரி மனிதர்களை விட ஆயுள் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement

ஜிம்முக்கு போனால் உடல் கட்டழகு பெறலாம். உடல் ஃபிட்டா இருக்கும். உயரத்துக்கேற்ற எடையை துல்லியமாக பெற்று விடலாம். இப்படி நினைத்துதான் ஜிம் போகிறேன் என்று பலரும் சொல்லிகொண்டிருக்கிறார்கள்.அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க விரும்புகிறேன் என்று சொல்பவர்களும் அதிகளவில் உண்டு. ஆனால் அதிக உடற்பயிற்சி, உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.

2021 ஆம் ஆண்டு தி ஜார்னல் மயோ கிளினிக் நடத்திய ஆய்வில் இருந்து இந்த முடிவுகள் பெறப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 18 வயதிற்கு மேற்பட்ட 9000 நபர்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்களுக்கு அதிக அளவிலான கார்டியோ பயிற்சி, பளு தூக்குதல் மற்றும் பல விளையாட்டு வீரர்களை நீண்ட நாட்களுக்கு பரிசோதித்து அந்த தரவுகளை சோதித்துப் பார்த்ததில் சாதாரணமாக உடற்பயிற்சி செய்பவர்களை விட உடலை வருத்தி அதிக வேலை கொடுத்து உடற்பயிற்சி செய்பவர்களின் ஆயுள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட வாரத்திற்கு 4:30 மணி நேரத்திற்கு மேல் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உடலை ஒரு எல்லையைத் தாண்டி அழுத்தம் கொடுத்து மிக கடினமான உடல் அசைவுகளை மேற்கொள்ளும் போது அது ஆபத்தில் முடிகிறது. அதிக அளவில் உடற்பயிற்சி செய்யும் போது ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுவதாகவும் மேலும் உடலில் உள்ள என்சைம்களின் சமநிலை பாதிக்கப்பட்டு இதயத்திற்கு அதிக அழுத்தம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் ஜிம்முக்கு செல்பவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார்கள்.

40 வயதிற்கு மேல் அதிக உடற்பயிற்சி செய்வது கூடாது : உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற வயது இளமைக் காலம் தான். 45 அல்லது 45 வயதை கடந்த பிறகு இதயத்தின் செயல்பாடு படிப்படியாக குறைய தொடங்கும். எனவே மிக அதிக வேலைகளை இதயத்தினால் செய்ய முடியாது. 40 வயதை கடந்தவர்கள் அதிகாலையில் எழுந்து கடுமையான உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக நீண்ட நடை பயிற்சி சைக்கிள் ஓட்டுவது, தோட்டத்தை பராமரிப்பது, யோகா செய்வது ஆகிய மிக லேசான முறையில் உடலுக்கு பயிற்சி அளிப்பது நன்மை கொடுக்கும்.

ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் ஆபத்து : 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி ஒரு நாளைக்கு 60 நிமிடம் என இரண்டிலிருந்து நான்கு வாரங்கள் ஓட்டப்பந்தய பயிற்சி செய்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் என ஓர் ஆய்வு அறிக்கை தெரிவித்தது. ஆனால் சமீபத்தில் இந்த அளவை தாண்டி ஓட்ட பயிற்சி செய்பவர்களுக்கு அந்த நன்மைகள் படிப்படியாக குறையும் என தெரியவந்துள்ளது. முக்கியமாக மணிக்கு ஏழு மைல்களுக்கும் அதிக வேகத்தில் ஓடுபவர்களுக்கு ஆயுள் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும்? உடலை அதிக அளவில் வருத்திக்கொண்டு மணி கணக்கில் உடற்பயிற்சி செய்வதை விட, வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி என்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள போதுமானது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Read more ; TMB வங்கியில் வேலை.. ரூ.70,000 வரை சம்பளம்..!! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

Tags :
Advertisement