உங்கள் நகங்களில் வெள்ளை கோடுகள் இருக்கா?? அப்போ கட்டாயம் இதை படியுங்கள்..
பலருக்கு தங்களின் நகங்களில், வெள்ளை கோடுகள் இருக்கும். பலர் அதை கவனிப்பதே இல்லை. ஆனால் நகங்களில் தோன்றும் இந்த அறிகுறிகள், நமது உடலில் ஜிங்க் குறைபாட்டை உணர்த்துகிறது. ஜிங்க், நமது உடலில் இரும்புக்கு அடுத்தபடியாக மிகுதியாக உள்ள இரண்டாவது கனிமமாகும். மேலும் இது புரத உற்பத்தி, உயிரணு வளர்ச்சி, டிஎன்ஏ தொகுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை பராமரித்தல் மற்றும் என்சைம் எதிர்வினைகள் போன்ற பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு தேவையானது இந்த ஜிங்க் தான். இதனால் இதை 'மிராக்கிள் மினரல்' என்றுஅழைப்பது உண்டு. இத்தனை முக்கியமான ஜிங்க் நமது உடலில் போதுமான அளவு இருந்தால் மட்டும் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள், உங்கள் உடலில் ஜிங்க் குறைபாட்டை உணர்த்துகிறது. அந்த அறிகுறிகள்: நீங்கள் நீண்ட நேரம் தூங்குவதில்லை, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, குறைந்த பாலுணர்வு அல்லது மனநிலை, எளிதில் எடை அதிகரிப்பது, உங்கள் பற்கள் சிதைந்து ஈறுகளில் இரத்தம் வருவது, அடிக்கடி எரிச்சல், கோபம் இருக்கும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உங்கள் உடலில் ஜிங்க் குறைபாடு உள்ளது என்று அர்த்தம். இதற்க்கு நீங்கள் ஜிங்க் அதிகம் உள்ள உணவு பொருள்களை சாப்பிடுவது அவசியம்.
ஜிங்க் அதிகம் உள்ள உணவு பொருள்கள்: நண்டு மற்றும் இறால், இறைச்சி மற்றும் கோழி, காளான், கீரை, ப்ரோக்கோலி, பூண்டு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள், மொச்சை, பைன், சியா, மற்றும் பூசணி போன்ற நட்ஸ் மற்றும் விதைகள், , ஓட்ஸ் மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்கள், கார்ன்ஃப்ளேக்ஸ், மியூஸ்லி, கோதுமை ஃப்ளேக்ஸ் போன்ற வலுவூட்டப்பட்ட தானியங்கள், பால் உணவுகள் ஆகியவை ஆகும்.
இது போன்ற ஜிங்க் அதிகம் உள்ள உணவு பொருள்களை நீங்கள் சாப்பிட வேண்டும். மேலும், நீங்கள் ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்ளலாம். ஜிங்க் குளுக்கோனேட், ஜிங்க் சல்பேட், ஜிங்க் சிட்ரேட் போன்ற பல்வேறு ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ் உள்ளது. இதனால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று உங்களுக்கு தகுந்த சப்ளிமெண்ட்டை எடுத்து கொள்ளலாம். அதிக அளவு ஜிங்க் எடுத்துக்கொண்டால், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும்.
Read more: “அவுங்க கிட்டவே நிற்க முடியல”; பிரபல நடிகையுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த்…