டீ குடித்து உடல் எடையை குறைக்கலாம்... எப்படி தெரியுமா??
இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை உடல் பருமன். உடலுக்கு ஆகாத பொருள்களை எல்லாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு, எரிய உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை செய்வது உண்டு. உடல் எடையை குறைக்க உடல் பயிற்சி முக்கியம். ஆனால் அதே சமயம், நமது டயட் சரி இல்லை என்றால், எந்தவிதமான பலனும் இருக்காது. இதனால் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலர், கட்டுப்பாடாக தான் சாப்பிடுகிறேன் ஆனால் நாள் ஒன்றுக்கு 5 டீ மட்டும் குடிப்பேன் என்று கூறுவது உண்டு.
இது முற்றிலும் தவறு இதனால் உங்களின் எடை குறையாது. நாம் சாப்பிடாமல் டீ அல்லது ஜூஸ் குடித்தாலும் உடல் எடை அதிகரிக்க தான் செய்யும். இதற்க்கு காரணம் அந்த பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை தான். சர்க்கரையை நாம் அதிகம் எடுத்து கொண்டால், கட்டாயம் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் ஒரு சிலரால் சூடான பானம் குடிக்காமல் இருக்கவே முடியாது. அவர்கள் டீ அல்லது காப்பிக்கு பதிலாக ஒரு சில ஆரோக்கியமான பானங்களை குடிக்கலாம். அந்த பானங்கள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை சாப்பிடும் முன் சூடாக அருந்தலாம். இதனால், உணவு நன்றாக செரிமானம் ஆகி, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர உதவும். இதற்க்கு பதில் சீரகத்தை வறுத்து பொடி செய்து, அதில் வெந்நீர் கலந்த பானத்தையும் அருந்தலாம். உடல் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றொரு சிறந்த பானம் மசாலா இஞ்சி டீ. இதய ஆரோக்கியம் முதல் நுரையீரல் ஆரோக்கியம் வரை பல வகைகளில் நன்மை தரக்கூடிய இஞ்சி எலுமிச்சை பானத்தை சாப்பிடும் முன் அருந்துவதால், உடல் கொழுப்பு சிறப்பாக கரையும். இதற்க்கு கொதிக்கும் நீரில் நசுக்கிய இஞ்சி மற்றும் தேயிலை தூளை போட்டு பத்து நிமிடம் மூடி வைத்து விடுங்கள்.. பின்னர் அதை வடிகட்டி அதில் சிறு துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
Read more: “கோவிலில், பூசாரி செய்யும் காரியமா இது?”; சாமி கும்பிட கோவிலுக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..