For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெளுத்து வாங்கிய கனமழை..!! வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட குழந்தை..!! சரியான நேரத்தில் வந்த இளைஞர்கள்..!!

The young people from the area safely rescued the women and the infant who were traveling in the auto when the auto passing by got stuck in the flood water.
12:12 PM Oct 14, 2024 IST | Chella
வெளுத்து வாங்கிய கனமழை     வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட குழந்தை     சரியான நேரத்தில் வந்த இளைஞர்கள்
Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த சில தினங்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கனமழை, இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது. இந்த மழையால் புதுக்கோட்டையே வெள்ளக்காடாக மாறியது. புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் இடையப்பட்டி பகுதியில் இருந்து வந்த காட்டாற்று நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

இதேபோல், வடக்கு நான்காம் வீதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் அவ்வழியாக சென்ற ஆட்டோ மாட்டிக்கொண்டதில் ஆட்டோவில் பயணித்த கைக்குழந்தை உள்ளிட்ட பெண்களை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும், பல்வேறு பகுதிகளில் வரத்து வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் புதுக்கோட்டை மச்சுவாடி ஜீவா நகர் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு குடியிருக்க கூடிய‌ பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் வரத்து கால்வாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல்தான் காமராஜபுரம் பகுதியிலும் வெள்ள நீர் பல வீடுகளில் உட்புகுந்த நிலையில், காமராஜபுரம் 21ஆம் வீதியில் உள்ள இரண்டு வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

Read More : 10 ரூபாய் நோட்டு இனி புழக்கத்தில் இருக்காதா..? ரிசர்வ் வங்கியில் என்ன நடக்கிறது..?

Tags :
Advertisement