ரூ.2000 UPI பரிவர்த்தனை.. சர்வீஸ் சார்ஜுக்கு 18% ஜிஎஸ்டி? முடிவை மாற்றிய மத்திய அரசு..!!
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி 54ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கூகுள் பே, போன் பே போன்ற இடைத்தரக நிறுவனங்கள் மூலம் ரூ.2000 வரை மக்கள் மேற்கொள்ளும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு அந்த இடைத்தரகர்களிடம் (கூகுள் பே, போன் பே போன்றவை) ஜிஎஸ்டி வரியை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
நாட்டில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில், ரூ.2000 கீழ் உள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தான் அதிகம் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் தான் வரும் ஜிஎஸ்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி ரூ.2000 வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி முடிவு செய்துள்ளது. ரூ.2000க்கு குறைவாக செய்யப்படும் யுபிஐ பேமெனட்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தகவல்கள் வேகமாக பரவின.
பணப்பரிவர்த்தனையை எளிதாக்கிய இந்த யுபிஐ பேமென்ட்டுக்கும் ஜிஎஸ்டியா? என சமானிய மக்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அதாவது, இந்தியாவில் 80% UPI பரிவர்த்தனைகள் ரூ.2000 என்கிற அளவில் நடக்கிறது. இப்படி இருக்கும்போது இதுக்கும் ஜிஎஸ்டி போட்டால் என்ன செய்வது? என்று பல்வேறு தரப்பினர் அதிருப்பதி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், இன்று நடந்த 54வது GST கவுன்சில் கூட்டத்தில், இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இந்த கூட்டத்தில், 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து நல்வாய்ப்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் சில்லறை வணிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர், ஹரியானா உட்பட நான்கு மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூற்கின்றனர்.
Read more ; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! செப்.17ஆம் தேதி அரசு விடுமுறை..!!