For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரயில் பெட்டிகளில் CCTV கேமராவுக்கு ரூ.20,000 கோடி...? ரயில்வே துறை விளக்கம்

Rs. 20,000 crore for cameras in train coaches
06:36 AM Nov 22, 2024 IST | Vignesh
ரயில் பெட்டிகளில் cctv கேமராவுக்கு ரூ 20 000 கோடி     ரயில்வே துறை விளக்கம்
Advertisement

2024 நவம்பர் 16-ம் தேதியிட்ட பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியிடப்பட்ட "ரயில் பெட்டிகளில் கேமராவுக்கு ரூ. 20,000 கோடி ஆர்எஃப்பி மிதக்கிறது" என்ற கட்டுரைக்கும், பிற ஊடகங்களில் வெளியான இதே போன்ற அறிக்கைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் மறுப்பு செய்தி ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

ஐபி-சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகளுடன் பெட்டிகளை மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்முயற்சி குறித்து, தவறான தகவல்களைக் கொண்டுள்ளன. இது திட்டத்தின் நோக்கம், செலவு மற்றும் முன்னேற்றத்தை தவறாக சித்தரிக்கிறது. இந்த தகவல்களை நாங்கள் திட்டவட்டமாக மறுப்பதுடன், இந்த திட்டத்திற்கான ஏல ஆவணம் இன்னும் நிதி மதிப்பாய்வில் உள்ளது என்பதையும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெளிவுபடுத்துகிறோம்.

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் மற்றும் பிற வெளியீடுகளின் தகவலுக்கு மாறாக, டெண்டர் அல்லது டெண்டர் அழைப்பு அறிவிப்பு (என்ஐடி) எதுவும் வெளியிடப்படவில்லை. அறிவிக்கப்படும் புள்ளி விவரங்களும் காலக்கெடுவும் ஊகத்தின் அடிப்படையிலானவை மற்றும் உண்மையில் எந்த அடிப்படையும் இல்லை. ஊடக நிறுவனங்கள் இதழியல் நேர்மையைக் கடைப்பிடிக்கவும், வெளியிடுவதற்கு முன்பு அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் அவற்றின் தகவல்களை சரிபார்க்க வேண்டும். சரிபார்க்கப்படாத அல்லது ஆதாரமற்ற கூற்றுக்களை பரப்புவது இந்திய ரயில்வேயின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதோடு, பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது.

பங்குதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள்: வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான தனது உறுதிப்பாட்டை இந்திய ரயில்வே மீண்டும் உறுதிப்படுத்துகிறது. துல்லியமான புதுப்பிப்புகளுக்கு இந்திய ரயில்வே அல்லது பத்திரிகை தகவல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement