குட் நியூஸ் மாணவர்களே.. தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள் குறைப்பு..!! - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் வேலை நாட்கள் 220 நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேலை நாட்களை குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 2024-25 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான வேலை நாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 10-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட நடப்பு கல்வி ஆண்டுக்கான (2024-25) நாள்காட்டியில் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் 220 என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பணி சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில பள்ளி வேலை நாட்களை பள்ளிக்கல்வித்துறை குறைத்தது. இந்நிலையில், 220 நாளாக அறிவிக்கப்பட்ட வேலை நாட்கள் 210 நாட்களாக குறைத்து திருத்தப்பட்ட நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
Read more ; எத்தனை காலம் தான் இடஒதுக்கீடு? விரைவில் ரத்து செய்வோம்..!! – ராகுல் காந்தி பேச்சு