Vikravandi By Election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறு வாக்கு பதிவு - பகல் 1 மணி நிலவரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், பகல் 1 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது
அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தற்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், பகல் 1 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பகல் 1 மணிவரை 50.95 சதவிகிதம் மக்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மொத்தமுள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் இதுவரை 59,136 ஆண்களும், 61,625 பெண்களும் வாக்கு செலுத்தியுள்ளனர்.