முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Big Twist: டெல்லி முதல்வராக பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி...?

06:20 AM Mar 26, 2024 IST | Vignesh
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக அவரது மனைவி சுனிதா முதல்வராகப் பதவியேற்கலாம் என்று தகவல் பரவி வருகிறது.

Advertisement

மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை வியாழக்கிழமை கைது செய்தது. விசாரணைக்கு ஆஜராகுமாறு கேஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இப்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும். கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள கேஜ்ரிவாலின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரிடம் சுமார் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த ஊழல் வழக்கில் ஆம் ஆத்மிக்கு ரூ. 100 கோடி வழங்கப்பட்டதில் தொடர்புடைய பாரத் ராஷ்ட்ர சமிதி எம்எல்சி கவிதா ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கேஜ்ரிவால் சந்தித்து, மதுபான கொள்கை விஷயத்தில் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஊழலின் மதிப்பு ரூ.100 கோடி மட்டுமல்ல. லஞ்சம் கொடுத்தவர்கள் அடைந்த பலனும் இதில் சேர்க்கப்பட வேண்டும். மதுபான வியாபாரிகள் அனைவருமே பணம் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலிடம் மார்ச் 28-ம் தேதி வரை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக அவரது மனைவி சுனிதா முதல்வராகப் பதவியேற்கலாம் என்று தகவல் பரவி வருகிறது.

Advertisement
Next Article