அந்தரத்தில் தொங்கும் சிவன் கோயில் தூண்.? எங்கு உள்ளது தெரியுமா.!?
ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. அங்கு 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட கோயில் தான் வீரபத்ரர் திருக்கோயில். சிவனின் ஜடாமுடியிலிருந்து தோன்றியவர் தான் வீரபத்ரர்.
இவருக்காக கட்டப்பட்டது தான் இந்த திருக்கோயில். இந்தக் கோயிலின் விசேஷமாக கூறப்படுவது, ஒரே கல்லை பயன்படுத்தி செதுக்கப்பட்ட சிவன் சிலையும், பெரிய நந்தி சிலையும் தான். மேலும் இந்த கோயிலில் 70 தூண்கள் இருந்து வருகின்றன. இந்த தூண்களில் ஒரே ஒரு தூண் மட்டும் அந்தரத்தில் தொங்குவது போல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அங்கு வரும் பக்தர்கள் இந்த துணை அதிசயமாக பார்த்துவிட்டு வணங்கி செல்கின்றனர். மேலும் தூணின் அடியில் பேப்பர் மற்றும் துணியை ஒரு பக்கம் செலுத்தி அடுத்த பக்கமாக எடுத்தால் குடும்பத்தில் பொருளாதாரம் மேம்பாடு அதிகரிக்கும் என்பது இந்த கோயிலின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஆகாயத்தூண் என்று அழைக்கப்படும் இந்த அதிசய துணை ஒரு முறை பிரிட்டிஷ் இன்ஜினியர் ஒருவர் தூண் எப்படி இவ்வாறு அந்தரத்தில் தொங்குகிறது என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவரால் காரணத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை. இக்கோயிலில் அமைந்திருக்கும் ஒற்றைக் கல்லால் செதுக்கிய சிவன் சிலையும், 30 அடி நீளமும் 20 அடி உயரமும் கொண்ட நந்தி சிலையும், அந்திரத்தில் தொங்கும் தூணும் அந்த காலகட்டத்தில் எப்படி கட்டி இருப்பார்கள் என்பதை குறித்து புரியாத புதிராகவே இன்று வரை இருந்து வருகிறது.