எப்போ கல்யாணம்? - கூட்டத்தில் இருந்து வந்த பெண்ணின் குரல்.. வெட்கத்தோடு ராகுல் சொன்ன பதில்!
உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தியிடம், திருமணம் குறித்து எழுப்ப பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் வேட்பாளருமான ராகுல் காந்தி பேசினார். அப்போது பேசிய அவர், “வருகின்ற ஜூன் 4ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணின் பெயர் தேர்வு செய்யப்பட்டு, அந்த பெண்ணின் வங்கிக் கணக்கில், ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் வரவு வைக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
அப்போது ரேபரேலி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இருந்து ஒரு பெண், ராகுல் காந்தியிடம் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்..? என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த ராகுல் காந்தி, விரைவில் திருமணம் செய்துகொள்கிறேன் என்று தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரேபரேலியில் நடந்த பிரசாரத்தின்போது ராகுல் காந்தியுடன் அவர்களது அக்காவான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.
எனக்கு இரண்டு தாய்மார்கள் (சோனியா காந்தி, இந்திரா காந்தி) உள்ளனர் என்று நான் ஒரு வீடியோவில் சொன்னேன். குழந்தைக்கு வழியைக் காட்டி பாதுகாப்பவள் தாய். என் அம்மாவும் இந்திரா ஜியும் எனக்காக இதைச் செய்தார்கள். இது எனது இரு தாய்மார்களின் 'கர்மபூமி'. இதனால்தான் நான் ரேபரேலியில் போட்டியிட வந்துள்ளேன். தனது பாட்டி இந்திரா காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி மற்றும் தாயார் சோனியா காந்தி ஆகியோர் தொகுதி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டதாக ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தில் கூறினார்.