முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது..? மாணவர்கள் எதிர்பார்ப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

07:59 AM May 09, 2024 IST | Chella
Advertisement

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள், மே 6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியாகின. மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12 -ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement

முன்னதாக மே 10ஆம் தேதியன்று பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மே 11ஆம் தேதி 11அம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்யும் முறை:

* https://tnresults.nic.in/ என்ற TN இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

* முகப்புப் பக்கத்தில், காட்டப்படும் "HSE 1 முடிவு 2024' எனற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

* பின்னர் முடிவுகள் அறியும் லாகின் பக்கம் வந்தவுடன், உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

* TN HSE 1 தேர்வு முடிவு மதிப்பெண் அட்டை திரையில் திறக்கப்படும். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Read More : தொடர்ந்து சிலிண்டர் வேண்டுமா..? வாடிக்கையாளர்களின் கைரேகை பதிவு கட்டாயம்..!! எப்படி செய்வது..?

Advertisement
Next Article