For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பால் உற்பத்தியில் புதிய வரலாறு.. பணியாளர்களுக்கு போனஸ், ஊக்கத்தொகை அறிவித்த அமைச்சர்..!!

The minister also gave important information regarding incentives, bonuses, stock dividends and livestock insurance subsidy to milk producers.
03:22 PM Nov 27, 2024 IST | Mari Thangam
பால் உற்பத்தியில் புதிய வரலாறு   பணியாளர்களுக்கு போனஸ்  ஊக்கத்தொகை அறிவித்த அமைச்சர்
Advertisement

தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.  பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ், பங்கு ஈவுத்தொகை மற்றும் கால்நடை காப்பீட்டு மானியம் தொடர்பாகவும் அமைச்சர் முக்கிய தகவலை கூறியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உற்பத்தியில் வரலாற்றில் இல்லாத அளவிற்குத் தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி 2017முதல் 2020 வரை முறையே 7.742, 8.362, 8.759 மில்லியன் டன்களாக இருந்த தமிழ்நாட்டின் பால் உற்பத்தி 2021 முதல் 2023 ஆம் ஆண்டுகளில் முறையே 9.790, 10.107, 10.317 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது. தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவு  2019-2020 ஆண்டில் நாளொன்றுக்கு 315 கிராமாக இருந்தது

2022-2023 ஆம் ஆண்டில் அது 369 கிராமாக உயர்ந்திருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. 2022-23ம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.27.60 இலட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.12.58 இலட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது

மேலும் 2023-24ம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.25.85 லட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.11.61 இலட்சமும் உற்பத்தியுடன் இணைந்த  ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் 1.39 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1,951.74 இலட்சம் போனஸ் ஆகவும் ரூ.3432.62 லட்சம் பங்கு ஈவுத்தொகையாகவும் ரூ.38.63 இலட்சம் ஆதரவு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

கால்நடை காப்பீடு திட்டம் : பால் உற்பத்தியாளர்களின் 5 இலட்சம் கறவை மாடுகளுக்கு 85 விழுக்காடு மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று பால் உற்பத்தியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்வதால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. முதலமைச்சரின் வழிக்காட்டுதல்களால் பால்வளத்துறை எதிர்காலங்களில் இன்னும் புதிய சாதனைச் சிகரங்களை எட்டும் என தெரிவிக்கப்பட்டது.

Read more ; சென்னையை நெருங்கும் புயல்..!! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..?

Tags :
Advertisement