For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”தேர்தல் காலம் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 கொடுப்போம்”..!! சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் துரைமுருகன்..!!

Minister Duraimurugan gave a humorous response in the Legislative Assembly regarding the Pongal prize money.
04:34 PM Jan 09, 2025 IST | Chella
”தேர்தல் காலம் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை ரூ 1 000 கொடுப்போம்”     சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் துரைமுருகன்
Advertisement

பொங்கல் பரிசுத் தொகை குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் ஈரோடு தொகுதி தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்குவது குறித்து அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அதிமுக பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி பேசுகையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2,500 வழங்கப்பட்டது. ஆனால், அப்போது ரூ.5000 கொடுக்க வேண்டும் என திமுக கூறியது. இப்போது ரூ.1,000 கூட கொடுக்கவில்லை என்று கூறினார். இதற்கு பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”2021ஆம் ஆண்டு தேர்தல் இருந்தது. அதனால், 2500 ரூபாய் கொடுத்தீர்கள். ஆனால், இப்போது தேர்தல் காலம் இல்லை. பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது குறித்து தேர்தல் வரும்போது பார்க்கலாம் என்று கூறினார்.

அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ”பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை கருணாநிதி அவர்கள் தொடங்கி வைத்தார். ஆனால், அதன் பிறகு அதிமுக ஆட்சியின்போதும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை. தேர்தல் வந்தபோதுதான் அதிமுக அரசு பரிசுத் தொகையும் வழங்கியது” என்று கூறியிருந்தார்.

Read More : காலையில் எழுந்ததும் முதல் வேலையா உங்கள் குழந்தைகளிடம் இப்படி பண்ணுங்க..!! பெற்றோர்களே மறந்துறாதீங்க..!!

Tags :
Advertisement