”அண்ணனுக்காக நான் இருக்கிறேன்”..!! ”ஆதாரம் ரெடியா இருக்கு”..!! திடீரென சீமானுக்கு ஆதரவு தெரிவித்த அண்ணாமலை..!!
சீமானுக்கு ஆதரவான ஆதாரத்தை கொடுக்க தயாராக இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ”கடந்த 15 நாட்களாக அமைச்சர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். திமுகவின் 2ஆம் கட்ட தலைவர்கள், ஞானசேகரன் யார் என்றே தெரியாது. அவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார். ஆனால், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் அனுதாபி என்று ஒரு வார்த்தையை கூறியுள்ளார்.
இதனால் முதல்வரின் இந்த செயல்பாடு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க இருப்பதாக பார்க்கிறேன். திரும்ப திரும்ப கேட்பது என்னவென்றால், காவல் ஆணையர், அமைச்சர் ரகுபதி, முதல்வர் என்று அனைவரும் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள். தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை பொறுத்தவரை, அங்கு சுரங்கத்திற்கு அனுமதியில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசு நிர்பந்திக்க போவதில்லை என்று தெளிவாக கூறியுள்ளது. முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.
முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்காததால் தான் மதுரையில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் பேரணியை பார்க்கிறோம். அவர் மூத்த அமைச்சர் ஒருவரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அப்படி செய்யாததால், பேரணி நடத்துள்ளது. இனியாவது முதல்வர் தலையிட்டு இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவரிடம் பெரியார் குறித்து சீமான் கூறிய சர்ச்சை கருத்து குறித்த கேள்விக்கு, பெரியார் எங்க அப்படியொரு கருத்தை கூறியுள்ளார். எந்த புத்தகத்தில் கூறினார் என்ற ஆதாரத்தை நான் தருகிறேன். பெரியார் பேசிய பல விஷயங்களை இன்று பேசினால், மக்களிடையே அருவருப்பு வந்துவிடும். சீமான் அண்ணனை தேடி போலீஸ் வந்தால், அந்த ஆதாரத்தை கொடுத்தால் போதும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.